சனி, 6 ஆகஸ்ட், 2022

தன்னேரிலாத தமிழ் –486: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –486: குறள் கூறும்பொருள்பெறுக.

 

650

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது

உணர விரித்துரையா தார்.


நுண்ணிய நூல் பல கற்றும்,  தாம் கற்றதைப் பலரும் பயன் பெறுமாறு விரித்துரைக்கும் ஆற்றல் அற்றவர்கள், கொத்தாக மலர்ந்திருந்தும் மணம் கமழாத மலர்களை ஒப்பர் ஆவர்.


சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்

மாசுஅறக் கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்

ஆசு அறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை

எளிய என்னார் தொல் மருங்கு அறிஞர்.” – குறிஞ்சிப்பாட்டு, 15 – 18.


சான்றாண்மையும் பெருமையும் ஒழுக்கமும் குறையும் என்றால், அவற்றைக் குற்றமற நீக்கிப் புகழை நிலை நிறுத்துதல் என்பது தெளிந்த அறிவுடைய பெரியோர்க்கும் எளிதன்று என்று கூறுவர் சான்றோர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக