தன்னேரிலாத
தமிழ் –490: குறள்
கூறும் ”பொருள்” பெறுக.
663
கடைக்கொட்கச்
செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமம் தரும்.
ஒரு செயலைச் செய்து முடிக்கும்வரை
அச்செயலின்
நுட்பங்களைப்
பிறர் அறியாதவாறு
காத்து, அச் செயல் முடிந்தபின்னே வெளிப்படுத்துவதே செயல்திறன்
ஆகும். அங்ஙனமின்றி
இடையிலேயே
தொழில்நுட்பம்
வெளிப்படுமானால்
அது தீராத துன்பத்தைத்
தரும்.
“
ஆற்றும் துணையும் அறிவினை உள்ளடக்கி
ஊக்கம் உரையார் உணர்வு உடையார் …”
–நாலடியார், 196.
ஒரு செயலைச் செய்து முடிக்கும்
அளவும் தமது அறிவின் திறத்தை வெளிப்படுத்தாது
உள்ளத்தில்
அடக்கி, தமது மன வலிமையைச் செயல் திறன் மிக்க ஊக்கமுடையார்
வெளிப்படுத்த
மாட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக