செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

தன்னேரிலாத தமிழ் –495: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –495: குறள் கூறும்பொருள்பெறுக.

 

676

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்

படுபயனும் பார்த்துச் செயல்.


ஒரு செயலைச் செய்ய முயலுங்கால், அதனை முடிக்கும் வழிமுறைகளையும் ஏற்படும் இடையூறுகளையும் மனங்கலங்காது முயன்று முடிக்கும் நிலையில், அதனால் விளையும் பயன்களையும் ஆராய்ந்து பார்த்துச் செயலாற்ற வேண்டும்.


தண்டாச் சிறப்பின் தம் இன்னுயிரைத் தாங்காது

கண்டுழி எல்லாம் துறப்பவோ- மண்டி

அடி பெயராது ஆற்ற இளிவந்த போழ்தில்

முடிகிற்கும் உள்ளத்தவர்,” --நாலடியார், 62.


நெருங்கி எடுத்து வைத்த அடிபெயராது, பின்வாங்காமல், மிகவும் இழிவான துன்பங்கள்  வந்தபோதும் அதற்கெல்லாம் கலங்காது, எடுத்த செயலை நிறைவேற்றும் மன உறுதி உடையவர்கள், நீங்காத சிறப்புடைய தமது இன்னுயிரைத் தரியாமல் கண்டதற்கெல்லாம் உயிரைத் துறப்பார்களோ..? மாட்டார்கள் என்பதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக