தன்னேரிலாத
தமிழ் –489: குறள்
கூறும் ”பொருள்” பெறுக.
659
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும்
நற்பா லவை.
பிறர் கண்ணீர்விட்டு
அழுமாறு தீய வழிகளில் (ஊழல், கொள்ளை வணிகம், திருட்டு) ஈட்டிய செல்வம் எல்லாம், தாம் கண்ணீர்விட்டுக்
கதறி அழ அழத் தம்மைவிட்டு நீங்கும் ; நேர்மையான வழியில் தேடும் செல்வத்தை இழக்க நேர்ந்தாலும் பின்னாளில் நல்ல பயன்களையே நல்கும்.
” பெற்ற சிறுகப் பெறாத பெரிது
உள்ளும்
சிற்றுயிர்க்கு ஆக்கம் அரிது அம்மா
முற்றும்
வரவர வாய்மடுத்து வல்லிரால் மாய
எரிதழல் மாயா திரா.”
--- நீதிநெறிவிளக்கம், 64.
வலிய விறகுகளைப் போடப் போடத் தன்
வாயால் பற்றிக்கொண்டு சாம்பலாகும்படி எரியும்
நெருப்பு, விறகு தீர்ந்தாலோ அல்லது கிடைத்த
விறகுகள் முற்றிலும் எரிவதற்கு முன்போ
அணைந்து போதலும் உண்டு
. அவ்வாறே தாம்
பெற்ற பொருள்
மிகக் குறைவாகத் தோன்றி, கிடைக்காத பெரும் பொருளை
விரும்பும் அற்ப
உயிர்களுக்குப் பொருள்
வளமோ அன்றி
ஏனைய மேம்பாடுகளோ கூடுதல் அரிதாம். எனவே போதும்
என்ற மனம்
பெறாதவர்கள், பெற்ற
பொருளினால் ஆகும்
பயன்களையும் இழப்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக