தன்னேரிலாத
தமிழ் –494: குறள்
கூறும் ”பொருள்” பெறுக.
670
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.
எவ்வகையான
செயல்திறன்
பெற்றவராயிருந்தாலும்
செய்து முடிக்கும்
திறனாகிய
மனவலிமை இல்லாதவரை,
இவ்வுலகம்
ஏற்றுப் போற்றாது.
”வாய்நன்கு அமையாக் குளனும் வயிறு ஆரத்
தாய்முலை உண்ணாக் குழவியும் சேய்மரபின்
கல்வி மாண்பு இல்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு சேரப்பட்டார். “-----திரிகடுகம், 84.
வழிச் செல்வார்
வருத்தம் தீர்க்க
உதவாது, துறையின்றிக் கிடக்கும்
குளம் கொண்டோரும் ; வயிறு
நிறையத் தாய்ப்பால் அருந்தாத குழந்தையும் ; இளமையில் கல்வி
பயிலாத மாந்தரும் ஆகிய இம்மூவரும் வறுமையில் வீழ்ந்து துன்புறுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக