தன்னேரிலாத
தமிழ் –500: குறள்
கூறும் ”பொருள்” பெறுக.
688
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான்
பண்பு.
மனத்தூய்மை உடையவனாதல்; அமைச்சர்
முதலிய கற்றறிந்தார்
துணையைப்
பற்றி நிற்றல்; எத்தகைய சூழலையும்
எதிர்கொள்ளும்
துணிவு உடையவனாதல் ஆகிய இம்மூன்றும்
நிறைவாகக்
கொண்டு. தன் அரசர் ஆராய்ந்து
கூறியவழி
,வாய்மை தவறாது
அஃதாவது சொற்குற்றம்
வாராது தூதுரைத்தல்
தூது செல்வானுக்குரிய
பண்புகளாம்.
“ தூயவாய்ச் சொல்லாடல் வன்மையும் துன்பங்கள்
ஆயபொழுது
ஆற்றும்
ஆற்றலும்
காய்விடத்து
வேற்றுமை
கொண்டாடா
மெய்ம்மையும்
இம்மூன்றும்
சாற்றுங்கால்
சாலத்
தலை.” –அறநெறிச்சாரம், 154.
குற்றம் குறையின்றித்
தான் நினைக்கும்
கருத்துக்களை
எடுத்துச்
சொல்லும்
ஆற்றலும்;
துன்பங்கள்
சூழும் காலத்திலும்
தளர்ந்து
விடாமல் தாங்கிக்கொள்ளும்
பொறுமையும்
; தன்னை வெறுப்பவரிடத்தில்
மாறுபாடு
கொள்ளாத உண்மை உணர்வும்
ஆகிய இம்மூன்றும்
மிகவும் உயர்ந்தனவாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக