திங்கள், 31 அக்டோபர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் -8

நன்று அல் காலையும் நட்பில் கோடார்
சென்ற வழிப்படூஉம் திரிபுஇல் சூழ்ச்சியின்
புன் தலை மடப்பிடி அகவுநர் பெருமகன்
மாவீசு வண்மகிழ் அஃதை போற்றி
காப்புக் கைந்நிறுத்த பல்வேல் கோசர்  (கல்லாடனார்,அகம்.113:1-5)
உரை: நண்பர்கள் ஆக்கம் இழந்து கேடுற்றபோது அவர்பால்கொண்ட நட்பில்  ஒருபொழுதும் மாறுபாடு கொள்ளாதவராய் அவர்க்குத் தாமே வலியசென்று  உதவும்  பிறழாத கோட்பாடு உடையவர்கள் கோசர்கள்.

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

இயக்குநர் திரு சுப. முத்துராமன் அவர்களுக்கு விருது

அய்யா சுப. முத்துராமன் அவர்கள், பழகுதற்கு இனிய பண்பாளர் .மாசற்ற மனித நேயம் உடையவர். குறைகூறமுடியாத குணம் கொண்டவர்.
.வெள்ளுடையில் தூய உள்ளம் தெரியும்.
திரையுலகில் அவர் ஆற்றிய அருபணிகளைப் பாராட்டிச்  சங்கர ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
தகுதி உள்ளவர்களுக்குத் தகுதி உள்ளவர்களால் வழங்கப்படுவதுதான் விருது. விருது பெற்ற விருதாளரை வாழ்த்துகிறோம்







வெள்ளி, 28 அக்டோபர், 2011

போரில் உயிர் துறத்தல்..

நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
கோளுற விளியார்பிறர்    கொளவிளிந் தோரென
                                          மாமூலனார்,அகம்.61:1,2
கூற்றத்தாலே உயிர் கொள்ளப்பட்டு இறக்காமல் பிறர் தம்  பொருளைப்பெற்றுப் பயன் கொள்ளுமாறு இறந்தோர் நல்வினை செய்தோராவர்.
கூற்றம் கோளுற விளிதலாவது - ஒருவருக்கும் பயனின்றி வறிதே மரித்தல். பிறர் கொள விளிதல் - பிறர்க்குத் தம் பொருளை உதவிப் பயன்பட்டு மரித்தல். இதற்கு அமர்க்களத்தில் உயிர் துறத்தல் என்று பொருள் கொள்வர், நச்சினார்க்கினியர்,

வியாழன், 27 அக்டோபர், 2011

கட்டணக் கொள்ளை- அரசு செயல்படுமா?

தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் கட்டணக் கொள்ளையால் மக்கள் பெரிதும் அல்லல்படுகின்றனர். அரசு கண்டுகொள்வதில்லையே. 
கல்விக் கட்டணக் கொள்ளை
பேருந்துக் கட்டணக் கொள்ளை
சினிமா கட்டணக் கொள்ளை
இந்திய அரசியல் மக்கள் ஏற்றுக்கொண்ட தண்டனையா?

புதன், 26 அக்டோபர், 2011

மாதுளம் பழம் -POMEGRANATE

Pomegranate : The new wonder drug
Fruit Extract Benefits Heart, Lowers BP, Fights Cancer, Cures Sex Problem
London:Scientists have hailed an extract from the humble pomegranate as the biggest breakthrough in natural medicine since aspirin was discovered in willow trees in 1829.
They have described it as the Swiss Army Knife of natural pharmaceuticals as it can do so many things - from improving heart health, lowering blood pressure, treating inflammation and reducing the risk of cancers to tackling sexual dysfunction, the Sunday Express reported.
In fact, this is for the first time that they have been able to unlock the precious new extract from seeds, skin and pith of the fruit. It contains concentrated punicalagins, a plant nutrient that is virtually unique to pomegranates. Punicalagins are mostly found in the fruit"s inedible husk, rind, seeds and inner yellow membranes, which till now we tended to throw away.
Dr Sergio Streitenberger, head of research at Probelte Bio which made the breakthrough, said, We've been throwing away the seeds, skin and the pith of pomegranates for years because they are inedible an we haven't had the science to enable us to release the benefits".
Dr Emad Al-Dujaili at Queen Margaret University UK claims."The pomegranate continues to offer remarkable health benefits. " This new extract and the research that supports it suggests the fruit may be a beneficial natural supplement for the prevention of risk in serious diseases."-
 THE TIMES OF INDIA,oct.17,2011

செவ்வாய், 25 அக்டோபர், 2011

சங்க இலக்கியச் செய்திகள்

இப்படியும் இருந்தனரே..
கொடியன் ஆயினும் ஆக
அவனே தோழி என் உயிர் க் காவலனே (ஐங். மிகைப் பாட்டு)
கொடியவனே ஆனாலும் ஆகட்டும், அவனே என் உயிர்க் காவலன்

திங்கள், 24 அக்டோபர், 2011

கூத்தாடிகளால் குட்டிச் சுவரான தமிழ்நாடு-1

24 மணி நேரமும் திரைப்படங்கள் எங்கெங்கு காணினும் திரைக் காட்சிகள்க் காட்சிப் பெட்டிகளால் இல்லம் தோறும் கூத்தாடிக் கொடுமைகள்- நாடு உருப்படுமா?. மின்னணு யுகத்தில் தொலைக்காட்சியையும் கைப்பேசியையும் மிகக் கேவலமாகப் பயன்படுத்தும் போக்கு.. சகிக்கமுடியாத. இந்நிலை மாற வேண்டும் , மாற்றியே ஆகவேண்டும்.. கூத்தாடிகளின் குடியிருப்பாகிப் போன தொலைக்காட்சிகள்..அறிவியலின் ஆழ அகலங்களை அளந்துகொண்டிருக்கும் இந்தக் காலத்தில் தமிழ்த் தொலைக்காட்சிகள் அசிங்க ஆபாச  குத்தாட்ட சூதாட்ட நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. கூத்தாடிகளின் தொலைக் காட்சிகள் கூத்தாடிக் குடும்பங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. கூத்தாடிகள் எந்தவகையில் நாட்டை ஆளத் தகுதி உடையவர்கள்?.

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் -

ஐங்குறுநூறு-292, கபிலர்-சங்க இலக்கியத்தில் இப் பாடலில் மட்டுமே பின் முறை ஆக்கிய பெரும்பொருள் வதுவை (தொல்.கற்பியல்,31) என்ற இரண்டாவது திருமணம் குறிக்கப்பெற்றுள்ளது
.மயில்கள் ஆலப் பெருந்தேன் இமிர
தண்மழை தழீஇய மாமலை நாட
நின்னுஞ் சிறந்தனள் எமக்கே நீநயந்து
நல்மனை அருங்கடி அயர
எம்நலம் சிறப்பயாம் இனிப் பெற்றோளே
உரை:- மயில்கள் ஆடவும் பெரிய தேனீக்கள் ஒலிக்கவும் குளிர்ந்த மழை மேகங்கள் மலைமுகட்டைத் தழுவிக் கிடக்கும் பெரிய மலை நாடனே, நீ விரும்பி நம் மனையின் கண் கொணர்ந்து திருமணம் செய்துகொண்டமையின் அந்த மணத்தால் எம் நலனும் சிறந்தன. இப்போது யாம் பெற்ற இவள் உன்னைவிட ச் சிறப்பானவளாக எமக்கு உள்ளாள்.

வெள்ளி, 21 அக்டோபர், 2011

7 ஆம் அறிவு...2

கி.பி.529இல் காஞ்சியிலிருந்து போதிதர்மர் என்னும் தமிழ்த் துறவி ஒருவர் சீனாவிற்குச் சென்று மன்னரின் நட்பைப் பெற்று சென் பெளத்த (ZEN BUDDISM)  சமயத்தை நிறுவினார்.அங்கிருந்து அவர் கொரியாவிறிகுச் சென்றார். தென்னிந்தியக் கலைகள் பலவும் கொரியா வழியாக ஜப்பான் சென்றடந்தது. கியொட்டோவில் (KYOTO) ஆடப்படும் ஒரு தனிப்பட்ட சமய நடனம் இன்றும் கண்ணகி என்ற இந்தியப்(தமிழ்) பெயராலேயே வழங்கப்பட்டு வருகிறது. இது கோயில் கன்னிகளால் ஆடப்படுவது. இது தென்னிந்தியாவிலிருந்து சென்றதாகச் சொல்லப்படுகிறது. பருத்தியும் ஜப்பானுக்கு இந்தியர் ஒருவரால் கொண்டு செல்லப்பட்டதுதான்.அங்கு அவருக்காக ஒரு கோயில் கூட எழுப்பப்பட்டுள்ளது. போதிதர்மருடைய சென் பெளத்த சமயமே கொரியாவிலும் ஜப்பானிலும் மிகுதியாகப் பரவியது(.காண்க த.இ.க.க.)

குறுந்தொகையும் ஐங்குறுநூறும்

தலைவன் ஊரைப் பற்றிப் பாட வேண்டும்..
அகவன் மகளே அகவன் மகளே
மனவுக் கோப்பு அன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே (ஒளவையார்,குறுந்.23)
உரை:-அகவன் மகளே சங்குமணி மாலை போல நீண்ட கூந்தலை உடைய அகவன் மகளே  பாடுக பாட்டே இன்னும் பாடுக பாட்டே நீ தலைவன் ஊரைப் பற்றி, அவன் நெடிய குன்றம் குறித்துப் பாடிய பாட்டை மீண்டும் பாடுக.
அம்ம வாழி தோழி பன்மலர்
நறுந்தண் சோலை நாடுகெழு நெடுந்தகை
குன்றம் பாடான் ஆயின்
என்பயம் செய்யுமோ வேலற்கு அவ்வெறியே. (கபிலர்,ஐங்.244)
தலைவியே.. வாழ்க, பலவகையான மலர்களுடைய குளிர்ச்சி பொருந்திய மணமுடைய சோலைகளைக்கொண்ட நம் தலைவன் குன்றத்தினை வேலன் பாடாவிட்டால் இவ்வெறியாடலால் (தலைவிக்கு ) என்ன பயன் ?

வியாழன், 20 அக்டோபர், 2011

மேன்மை தங்கிய பூண்டி அய்யா அவர்கள்


வைய மீன்றதொன் மக்கள் உளத்தினைக்
கையி னாலுரை காலம் இரிந்திடப்
பைய நாவை யசைத்த பசுந்தமிழ்
ஐயை தாள்தலைக் கொண்டு பணிகுவம்
                                 --   தஞ்சைப் பெரும்புலவர் நீ.கந்தசாமிப் பிள்ளை
                                எனக்கு அருளுரை வழங்கிய நாள்-30-01-2008 அன்புடையீர்
       வணக்கம்,
அறத்தான் வருவதே இன்பம். விரும்பி செய்கின்ற உபகாரம் பரோபகாரம்.
நலிந்தவர்கள், தகுதியுள்ளவர்கள் வாழ வழிகாட்டுவதே மனித நேயத்தின் சிறப்பான சிறப்பு.
நல்லவன் என்ற சொல் பிறர் பேசக் கேட்பதே, தொண்டிற்கு ஆனந்தம்
 தங்களுடைய தமிழ்ச் சேவை வளமாகத் தொடரட்டும்.
                                                                                                       அன்பு
                                                                                           கி.து.வாண்டையார்

புதன், 19 அக்டோபர், 2011

முன்னேற்றப் பாதையில் முட்டுக் கட்டைகள்

நெடுநீர் மறவி மடி துயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன் (குறள்.605)
காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவுகடந்த தூக்கம் ஆகிய இந்நான்கும் கெடுகின்ற இயல்பு உடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாகும் (மு.வ.)

டிஃச்கவரி தமிழ் ஒளிபரப்பு

உங்கள் உலகம் உங்கள் மொழியில் , ஆம் நாம் வாழும் உலகத்தை நம்முடைய மொழியில் அறிந்துகொள்வதற்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது டிஃச்கவரி தமிழ் ஒளிபரப்பு.. உலகத் தோற்றம் குறித்து ஒளிபரப்பாகும் தொடர் தமிழர் அறிவியல் சிந்தனைக்குத் தொடர்புடையதாகத் தோன்றுகிறது. உலகைப் படைத்தவர் கடவுளா ? என்ற வினாவுக்கு விடையாகக் கடவுள் உலகத்தைப் படைக்கவில்லை என்றுஅறிவியல் வழி விளக்கம் தருகின்றது. தொடர்ந்து பாருங்கள் உண்மை புரியும்.

செவ்வாய், 18 அக்டோபர், 2011

தேர்தல்..

தமிழகத் தேர்தல் ...
காணக் கண் கோடி வேண்டும்
தேர்தல் ஆணையம் நடத்தும் தெருக் கூத்து
மக்கள் வரிப் பணம் பாழ்
சட்டம் ஒழுங்கு சீரழிவு
ஐ.ஏ.எஸ்., ஐ.பி. எஸ். அதிகாரிகள் நடத்தும் பாத பூசை
வெட்கம் இல்லாமல் விளம்பரப்படுத்தும் சனநாயகக் கடமை
வேட்டைக் காடாகிப் போன நாட்டைக் காப்பது யாரோ..?

களந்தை (களப்பாள்) வரலாறு

கடல் புடை  சூழ்ந்த நெடுநிலவுலகிலே எந்நாட்டினுஞ் சிறந்த சோழ வள நாட்டிலே, காவிரி நதிக்குத் தெற்கிலே, தஞ்சாவூர் ஜில்லாவிலே, மன்னார்குடி தாலுகாவிலே, திருத்துறைப்பூண்டிக்கு (நான்கு மைல்) மேற்கிலே, விளங்காநின்ற திருக்களர் தலத்திற்கு க் கூப்பிடு தூரத்திலே களந்தைப் பதியில் சுமார் இருநூறு வருஷங்களுக்கு முன் தருமபுரவாதீனத்திலே (அழகிய சிற்றம்பல தேசிகர் காலத்திலே) வித்துவானாயிருந்த (களந்தை) ஆதியப்பரென்பவர் வடமொழியிலிருந்து தென்மொழிச் செய்யுள் நடையில் பெயர்த்திருந்த புராணத்தையும்..................(தி.மு.சுவாமிநாத உபாத்தியாயர்,முகவுரை, திருக்களர்ப் புராணம்,1912)
களந்தை ஆதியப்பனாரியற்றிய திருக்களர்ப் புராணம் - சிறப்புப் பாயிரம்
கருணைமிகு நந்தியுரைப் படிசூத மாமுனிவன் கழறுமாறே
த்ருமைவரு மழகியசிற் றம்பலாற் குருவருளே தரித்துநாறு
முருகனெனக் கலையுணர்ந்த சரவணமா முனியருளான் மொழிகென் றோத
விருநிலத்தி லுயர்களந்தை யாதியப்பன் பசுந்தமிழா லியம்பல் செய்தான்.
அருந் தவப் புதல்வனாய்த் தோன்றி அருந் தமிழுக்குத் தொண்டற்றிய  புலவர்ஆதியப்பனார் பிறந்து சிறந்த ஊர் எம் ஊர்

திங்கள், 17 அக்டோபர், 2011

வாகை சூட..... வா சற்குணம்

படைப்பாளன் பின்னே மக்கள் செல்ல வேண்டும்
மக்கள் பின்னே படைப்பாளன் செல்லக்கூடாது.
இயக்குநர் சற்குணம்:- மக்களைத் தன்வயப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்கிறார் களவாணி, வாகைசூடவா, இரண்டு வெற்றிப் படங்களை அளித்துத் தமிழ்த் திரை உலகினரைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் . தமிழ்த் திரைக்கே உரித்தான மட்டமான சினிமாத்தனம் எதுவும் இல்லாத தனித்துவமான படைப்புகள் இவை.
வாகை சூட வா - ஓர் அழுத்தமான கதைக் கருவைக் கொண்டது. ஏழ்மைக்கும் வறுமைக்கும் கல்லாமையே காரணம்.முதலாளித்துவத்தின் உழைப்புச் சுரண்டலை ஒழிக்கும் கல்விப் புரட்சியை மிக மென்மையாக அதே நேரத்தில் மிக அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்ட முறை, ஒரு மிகச் சிறந்த விருதுக்கு உரிய படமாக மிளிர்கிறது.
தமிழ்த் திரை உலகில் சற்குணம் தனித்துப் பயணிக்கிறார்.. மிகத் துணிச்சலாக........
எதார்த்தம் என்ற பெயரில் அருவருப்புகளைப் படமாக்கிப் பணம் பார்த்த திரைத் துறையினர் நடுவே எதார்த்தத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளார் சற்குணம். அவர் படைத்த உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் ஆற்றல் வாய்ந்த இயக்குநர் சற்குணம் பாராட்டுக்குரியவர்.
கதை நாயகி இனியா- முகத்தில் நடனமாடும் நடிப்பு. கள்ளமில்லா வெள்ளை உள்ளங்களின் கலகலப்பான உரையாடல்கள், குழந்தைகளின் குறும்புத்தனங்கள் இனியாவைப் போல் இனிக்கின்றன. இனியாவை அறிமுகத்திலேயே அசத்திய இயக்குநருக்கு மேலும் ஒரு விருது கொடுக்கலாம் இனியாவுக்கும். கொடுக்கலாம்.

வெள்ளி, 14 அக்டோபர், 2011

7 ஆம் அறிவு

தற்கப்புக் கலை வல்லுநராகத் திகழ்ந்த புரூஸ்லீ குறித்த ஒரு செய்திப் படத்தை டிஸ்கவரி தமிழ் ஒளிபரப்பில் பார்த்தேன்.அதில் புரூஸ்லீ எழுதிய குறிப்பின் படி தற்காப்புக்கலை  ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு வந்ததாகக் குறிப்பிட்டார்கள்.

புதன், 12 அக்டோபர், 2011

மடல்

தன் காதலியை மணமுடிக்க இயலாது வருத்தமுற்ற தலைவன் மடலேறி ஊரறிய மணமுடிக்க  முடிவு செய்கிறான்.
பொன்நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
பல்நூல் மாலைப் பனைபடு கலிமாப்
பூண்மணி கறங்க ஏறி நாண்ட்டு
பழிபடர் உள்நோய் வழிவழி சிறப்ப
இன்னள் செய்தது இது என முன்நின்று
அவள் பழி நுவலும் இவ்வூர்
ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகுமார் உளனே.- மதுரைக் காஞ்சிப் புலவன்,குறுந்.173)
உரை: பொன் போன்ற ஆவாரம் பூக்களைப் பல நூல்களால் சேர்த்துக் கட்டிய மாலைகளை அணிந்து, பனங்கருக்கால் செய்த குதிரையில் அதன் கழுத்து மணி ஒலிக்க ஏறி, வெட்கத்தைத் தொலைத்துப் பழியோடு பரவிய உள்ளத்தை வாட்டும் காம நோய் நாளுக்குநாள் மிகுதிபட இன்னவளால்  இந்நிலை ஏற்பட்டது  என்று நான் வெளிப்படுத்த அதனை அறிந்த இவ்வூரார் அவள் எதிரே நின்று அவள் செய்த பழியைத் தூற்றுவர். எனவே நான் மடலூர்தலைச் செய்யத்  துணிந்துள்ளேன், என்றான் தலைவன்

திங்கள், 10 அக்டோபர், 2011

நடிகர்கள்

நாட்டை ஆளவும் நாட்டு மக்களுக்கு அறிவுரை கூறவும் நடிகர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.அவர்தம் தொழிலே நடிப்பது தான், அதிலும் உண்மை கொஞ்சமே பொய்யே மிகுதி. மக்களை மயங்க வைத்துப் பணம் ஈட்டுவதும் அதனால் கிடைக்கப்பெற்ற செல்வாக்கை அரசியல் அதிகாரத்திற்கு அடித்தளமாக்குவதும் முறையோ ?எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. சொந்த நாட்டிலே. ஒருமுறை நடிகவேள் எம்.ஆர். ராதா கூறினார் (சினிமா)  கலைஞன் என்பவன் பஞ்சமாபாதகத்தின் பார்ட்னர்.என்று.

வெள்ளி, 7 அக்டோபர், 2011

களப்பாள்...-3

திருவாவடுதுறை ஆதீனத்துச் சிவஞான சுவாமிகள் அருளிச் செய்த திருத்தொண்டர் திருநாமக்கோவையுள்
விறற் களந்தைக் கூற்றுவனார்-எனவும்.... சேக்கிழார் சுவாமிகள் அருளிச்செய்த திருத்தொண்டர் பெரியபுராணத்துள்....
..........நல் திருத் தொண்டின் முயன்றார் களந்தை முதல்வனார்- எனவும் கூறப்பட்ட  கூற்றுவ நாயனார் என்பவர் சோழவள நாட்டிலே காவிரி நதிக்குத் தெற்கிலே திருக்களரிக்கு நிருதி திசையிலே ஒரு கூப்பிடு தூரத்திலேயுள்ள களந்தைப் பதியிலே குறுநில மன்னர் மரபிலே திருவவதாரம் புரிந்தவர். களப்பாளன் என்னும் திருநாமம் பெற்றவர். களந்தையைத் தன்பெயரால் கோவில் களப்பாள், துயில் களப்பாள், அகரக் களப்பாள், பெரிய களப்பாள், நடு(நடுவக்)களப்பாள், நறுவீழிக் களப்பாள், அகரநறுவீழிக் களப்பாள்  என ஏழு கூற்றாகப் பிரித்தமையால் கூற்றுவன் என்னும் பெயர் பெற்றார்.
களந்தையில் பிறந்தவர், திருவாரூரில் பிறந்தவர் அடையும் பதத்தையும் இறந்தவர், காசியில் இறந்தவர் அடையும் பதத்தையும் அடைவர்.. களந்தைப் பதியைத் தரிசித்தவர், தில்லையைத்  தரிசித்தவர் பெறும் பேற்றையும் நினைத்தவர் ,திருவருணையை நினைத்தவர் பெறும் பேற்றையும் பெறுவர்.- திருக்களர் தி.மு. சுவாமிநாத உபாத்தியாயர்,களப்பாள் சிவஷேத்திர விளக்கம்,1911.--முற்றும்.

ரமணா படம் பார்த்தீங்களா..?

கேட்கிறார் ஒரு நடிகர்,  ரமணா படம் என்ன இவர் வாழ்க்கை வரலாறா? நடிப்பதெல்லாம் உண்மையானால் நாட்டில் புரட்சி வெடித்திருக்குமே.ஆமாம் இவர் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் ..உண்மையைச் சொல்வாரா? இவர் மட்டுமல்ல எந்த நடிகரும்  சொல்லமாட்டார்.

வியாழன், 6 அக்டோபர், 2011

களப்பாள்...-2

திருநாரையூர் பொல்லாப்பிள்ளையாருக்கு அமுதருத்திய சிவாநுபூதிச் செல்வராகிய நம்பியாண்டார் நம்பி அப்பொல்லாப்பிள்ளையார் திருவருளாலருளிய திருத்தொண்டர் திருவந்தாதியினுள்
நாதன் திருவடியே முடியாகக் கவித்து நல்ல
போதம் கருத்திற் பொறித்தமையால் அது கை கொடுப்ப
ஓதம் தழுவிய ஞாலமெல்லாம் ஒரு கோலின் வைத்தான்
கோதை நெடுவேல் களப்பாளனாகிய கூற்றுவனே
எனவும்-
சைவசித்தாந்த சாத்திரோபதேசஞ் செய்தற் பொருட்டு எழுந்தருளிய சந்தான குரவருள் ஒருவரும் தில்லை வாழ் அந்தணருள் ஒருவரும் ஆகிய உமாபதி சிவாசாரியார் அருளிய திருத்தொண்டர் புராண சாரத்தினுள்
குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்
   கூற்றுவனார் மாற்றலர் மண் கொண்டு சூடப்
பொன் தாழும் முடிவேண்டப் புலியூர் வாழும்
   பூசுரர்கள் கொடாது அகலப் புனிதன் ஈந்த 
மன்றாடும் திருவடியே முடியாச் சூடி
   மாநிலங்காத்து இறைவன் உறை மாடக்கோயில்
தென்திசையுடன் வணங்கிப் பணிகள் செய்து
       திருவருளால் அமருலகம் சேர்ந்துளாரே
எனவும்                                                       (தொடரும்)

புதன், 5 அக்டோபர், 2011

ஊரும் பேரும்

களப்பாள் - களந்தை
திருவிசைப்பா அருளிச் செய்த கருவூர்த் தேவர் திருவாய் மலர்ந்தருளிய திருக்களந்தை ஆதித்தேச்சரம்- பண் புறநீர்மை
கலைகடம் பொருளு மறிவுமா யென்னைக்
   கற்பினிற் பெற்றெடுத் தெனக்கே
முலைகடந் தருளுந் தாயினு நல்ல
   முக்கணா நுறைவிடம் போலு
மலைகுடைந் தனைய நெடுநிலை மாட
   மருங்கெலா மறையவர் முறையொத்
தலைகடன் முழங்கு மந்தணீர்க் களந்தை
   யணிதிக ழாதித்தேச் சரமே.
சைவ சமயந்தழைத்தோங்கற் பொருட்டுத் திருவவதாரம் புரிந்து தமிழ் வேதமாகிய தேவார திருவாசக மருளிச் ச்ய்த சமயக்குரவரு ளொருவராகிய சுந்தர மூர்த்தி நாயனா ( சிவபெருமான் அடியெடுத்துக் கொடுக்க) திருவாய் மலர்ந்தருளிய திருத் தொண்டத் தொகையினுள் 
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோ னடியேன்
எனவும்  .

காலம்

காலம்
அனைத்திலும் பெரியது
அனைத்திற்கும் உரியது
மேலே இருந்து ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்
அவன்தான்
காலத்தை அறிவிக்கும் கதிரவன்
அவன் தான் அனைத்தையும் அளந்து அறிந்து அளிப்பான் தீர்ப்பு
கடவுளை ஏமாற்றலாம் காலத்தை ஏமாற்ற முடியாது
காலம் தரும் தண்டனையிலிருந்து யாருமே தப்ப முடியாது
காலமே கடவுள்

செவ்வாய், 4 அக்டோபர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் -7

தொடர்ச்சி...
பெருமை கொள்கிறான். மனைவியிடத்தும் குழந்தையிடத்தும் மாறாக் காதல்கொண்டு இனிய இல்லறம் நடத்தும் தலைவன் இத்தகைய இன்ப வாழ்வினும் சிறந்த பொருள் வேறில்லை என்பதை நன்குணர்ந்து, இனி எக்காலத்தும் எதன் பொருட்டும் இவர்களை விட்டுப் பிரிவதில்லை என்று உறுதி கூறுகிறான்.
 பத்து அடிகளைக் கொண்ட இப்பாடலில் முதல் ஐந்து அடிகளில் தலைவனுக்குக் காணுந்தோறும் இன்பம் தரும் தலைவியின் அழகு வருணிக்கப்படுகிறது. எஞ்சிய ஐந்து அடிகள் பொருளினும் காதலே சிறந்தது எனக் கூறித் தலைவன்  பிரியேன்  என்று கூறுதலை விளக்குகின்றன.
காதல் தானுங் கடலினும் பெரிதே எனக் காதல் பாடல்களின் கருத்துக்களை எல்லாம் ஒன்று திரட்டிச் சீர் தூக்கினாற் போல ஈற்றடி அமைந்து இன்பம் தருகின்றது.. சொல்ல வந்த செய்திகளையெல்லாம் தெளிவாகப் புலப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த சொற்கள் அழகுற அமைந்துள்ளன.சொல்லாட்சியிலும் உவமைச் சிறப்பிலும் கருத்துச் செறிவிலும் குறிப்புப் பொருளிலும் சிறந்து விளங்கும்  இப்பாடல்  தமிழ் இலக்கியத்தின் மணி முடியாகத் திகழும்  தகுதியைப் பெற்றிருக்கின்றது.

சங்க இலக்கியச் செய்திகள் -6

நற்றிணைக்கு உரை வகுத்த உரையாசிரியர் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார்,  166 ஆம் பாடலைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது
“ இனி இச்செய்யுளுக்கு ஒப்பான சிறந்த செய்யுள் கிடைத்தல் அரிது, தமிழ் இலக்கியத்தின் மணிமுடியாக இதனைக் கொள்ளலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.உரையாசிரியரின் மனத்தைக் கவர்ந்த இந்தப் பாடலை யாத்த புலவர் இன்னாரென்று தெரியவில்லை.. தன்னைத் தன் புலமையால் நிலை நிறுத்திய சான்றோன் தந்த பாடல்....
பொன்னும் மணியும் போலும் யாழநின்
நன்னர் மேனியும் நாறிருங் கதுப்பும்
போதும் பணையும் போலும் யாழநின்
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்
இவைகாண் தோறும் அகமலிந்து யானும்
அறநிலை பெற்றோர் அனையோன் அதன்தலைப்
பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்
வினையும் வேறுபுலத்து  இலனே நினையின்
யாதனிற் பிரிவாம் மடந்தை
காதல் தானுங் கடலினும் பெரிதே.
இப்பாடல், செலவுக் குறிப்பினால் வேறுபட்ட கிழத்திக்குத் தலைவன் சொல்லியது என்னும் துறையில் அமைந்ததாகும்
தலைவியின் அழகு கண்டு மகிழும் தலைவன், புதல்வனைக் கண்டு 
                                                                                                               ...தொடரும்

திங்கள், 3 அக்டோபர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் -5

இளந்தேவனார் நற்றிணையில்..
 தலைவி, இரவில் வந்த விருந்தினர்க்குக் கறி சோறு சமைத்து விருந்திட்ட செய்தியை 
எல்லி வந்த நல்லிசை விருந்திற்கு
கிளரிழை அரிவை நெய் துழந்தட்ட
விளர் ஊன் அம்புகை எறிந்த நெற்றி
சிறுநுண் பல்வியர் பொறித்த - என்று குறித்துள்ளார்.
இரவில் வந்த புகழுடைய விருந்தினர் உண்பதற்கு நீ நெய்யை விட்டுக் கிளரிய ஊனைச் சமைத்ததனால் உண்டான புகை உன் நெற்றியில் பட்டுப் பல வியர்வைத் துளிகளைத் தோற்றுவித்தது ,என்று தோழி கூறுவாள்.