வெள்ளி, 21 அக்டோபர், 2011

குறுந்தொகையும் ஐங்குறுநூறும்

தலைவன் ஊரைப் பற்றிப் பாட வேண்டும்..
அகவன் மகளே அகவன் மகளே
மனவுக் கோப்பு அன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே (ஒளவையார்,குறுந்.23)
உரை:-அகவன் மகளே சங்குமணி மாலை போல நீண்ட கூந்தலை உடைய அகவன் மகளே  பாடுக பாட்டே இன்னும் பாடுக பாட்டே நீ தலைவன் ஊரைப் பற்றி, அவன் நெடிய குன்றம் குறித்துப் பாடிய பாட்டை மீண்டும் பாடுக.
அம்ம வாழி தோழி பன்மலர்
நறுந்தண் சோலை நாடுகெழு நெடுந்தகை
குன்றம் பாடான் ஆயின்
என்பயம் செய்யுமோ வேலற்கு அவ்வெறியே. (கபிலர்,ஐங்.244)
தலைவியே.. வாழ்க, பலவகையான மலர்களுடைய குளிர்ச்சி பொருந்திய மணமுடைய சோலைகளைக்கொண்ட நம் தலைவன் குன்றத்தினை வேலன் பாடாவிட்டால் இவ்வெறியாடலால் (தலைவிக்கு ) என்ன பயன் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக