கி.பி.529இல் காஞ்சியிலிருந்து போதிதர்மர் என்னும் தமிழ்த் துறவி ஒருவர் சீனாவிற்குச் சென்று மன்னரின் நட்பைப் பெற்று சென் பெளத்த (ZEN BUDDISM) சமயத்தை நிறுவினார்.அங்கிருந்து அவர் கொரியாவிறிகுச் சென்றார். தென்னிந்தியக் கலைகள் பலவும் கொரியா வழியாக ஜப்பான் சென்றடந்தது. கியொட்டோவில் (KYOTO) ஆடப்படும் ஒரு தனிப்பட்ட சமய நடனம் இன்றும் கண்ணகி என்ற இந்தியப்(தமிழ்) பெயராலேயே வழங்கப்பட்டு வருகிறது. இது கோயில் கன்னிகளால் ஆடப்படுவது. இது தென்னிந்தியாவிலிருந்து சென்றதாகச் சொல்லப்படுகிறது. பருத்தியும் ஜப்பானுக்கு இந்தியர் ஒருவரால் கொண்டு செல்லப்பட்டதுதான்.அங்கு அவருக்காக ஒரு கோயில் கூட எழுப்பப்பட்டுள்ளது. போதிதர்மருடைய சென் பெளத்த சமயமே கொரியாவிலும் ஜப்பானிலும் மிகுதியாகப் பரவியது(.காண்க த.இ.க.க.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக