ஞாயிறு, 23 அக்டோபர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் -

ஐங்குறுநூறு-292, கபிலர்-சங்க இலக்கியத்தில் இப் பாடலில் மட்டுமே பின் முறை ஆக்கிய பெரும்பொருள் வதுவை (தொல்.கற்பியல்,31) என்ற இரண்டாவது திருமணம் குறிக்கப்பெற்றுள்ளது
.மயில்கள் ஆலப் பெருந்தேன் இமிர
தண்மழை தழீஇய மாமலை நாட
நின்னுஞ் சிறந்தனள் எமக்கே நீநயந்து
நல்மனை அருங்கடி அயர
எம்நலம் சிறப்பயாம் இனிப் பெற்றோளே
உரை:- மயில்கள் ஆடவும் பெரிய தேனீக்கள் ஒலிக்கவும் குளிர்ந்த மழை மேகங்கள் மலைமுகட்டைத் தழுவிக் கிடக்கும் பெரிய மலை நாடனே, நீ விரும்பி நம் மனையின் கண் கொணர்ந்து திருமணம் செய்துகொண்டமையின் அந்த மணத்தால் எம் நலனும் சிறந்தன. இப்போது யாம் பெற்ற இவள் உன்னைவிட ச் சிறப்பானவளாக எமக்கு உள்ளாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக