புதன், 12 அக்டோபர், 2011

மடல்

தன் காதலியை மணமுடிக்க இயலாது வருத்தமுற்ற தலைவன் மடலேறி ஊரறிய மணமுடிக்க  முடிவு செய்கிறான்.
பொன்நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
பல்நூல் மாலைப் பனைபடு கலிமாப்
பூண்மணி கறங்க ஏறி நாண்ட்டு
பழிபடர் உள்நோய் வழிவழி சிறப்ப
இன்னள் செய்தது இது என முன்நின்று
அவள் பழி நுவலும் இவ்வூர்
ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகுமார் உளனே.- மதுரைக் காஞ்சிப் புலவன்,குறுந்.173)
உரை: பொன் போன்ற ஆவாரம் பூக்களைப் பல நூல்களால் சேர்த்துக் கட்டிய மாலைகளை அணிந்து, பனங்கருக்கால் செய்த குதிரையில் அதன் கழுத்து மணி ஒலிக்க ஏறி, வெட்கத்தைத் தொலைத்துப் பழியோடு பரவிய உள்ளத்தை வாட்டும் காம நோய் நாளுக்குநாள் மிகுதிபட இன்னவளால்  இந்நிலை ஏற்பட்டது  என்று நான் வெளிப்படுத்த அதனை அறிந்த இவ்வூரார் அவள் எதிரே நின்று அவள் செய்த பழியைத் தூற்றுவர். எனவே நான் மடலூர்தலைச் செய்யத்  துணிந்துள்ளேன், என்றான் தலைவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக