செவ்வாய், 4 அக்டோபர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் -7

தொடர்ச்சி...
பெருமை கொள்கிறான். மனைவியிடத்தும் குழந்தையிடத்தும் மாறாக் காதல்கொண்டு இனிய இல்லறம் நடத்தும் தலைவன் இத்தகைய இன்ப வாழ்வினும் சிறந்த பொருள் வேறில்லை என்பதை நன்குணர்ந்து, இனி எக்காலத்தும் எதன் பொருட்டும் இவர்களை விட்டுப் பிரிவதில்லை என்று உறுதி கூறுகிறான்.
 பத்து அடிகளைக் கொண்ட இப்பாடலில் முதல் ஐந்து அடிகளில் தலைவனுக்குக் காணுந்தோறும் இன்பம் தரும் தலைவியின் அழகு வருணிக்கப்படுகிறது. எஞ்சிய ஐந்து அடிகள் பொருளினும் காதலே சிறந்தது எனக் கூறித் தலைவன்  பிரியேன்  என்று கூறுதலை விளக்குகின்றன.
காதல் தானுங் கடலினும் பெரிதே எனக் காதல் பாடல்களின் கருத்துக்களை எல்லாம் ஒன்று திரட்டிச் சீர் தூக்கினாற் போல ஈற்றடி அமைந்து இன்பம் தருகின்றது.. சொல்ல வந்த செய்திகளையெல்லாம் தெளிவாகப் புலப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த சொற்கள் அழகுற அமைந்துள்ளன.சொல்லாட்சியிலும் உவமைச் சிறப்பிலும் கருத்துச் செறிவிலும் குறிப்புப் பொருளிலும் சிறந்து விளங்கும்  இப்பாடல்  தமிழ் இலக்கியத்தின் மணி முடியாகத் திகழும்  தகுதியைப் பெற்றிருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக