வெள்ளி, 7 அக்டோபர், 2011

களப்பாள்...-3

திருவாவடுதுறை ஆதீனத்துச் சிவஞான சுவாமிகள் அருளிச் செய்த திருத்தொண்டர் திருநாமக்கோவையுள்
விறற் களந்தைக் கூற்றுவனார்-எனவும்.... சேக்கிழார் சுவாமிகள் அருளிச்செய்த திருத்தொண்டர் பெரியபுராணத்துள்....
..........நல் திருத் தொண்டின் முயன்றார் களந்தை முதல்வனார்- எனவும் கூறப்பட்ட  கூற்றுவ நாயனார் என்பவர் சோழவள நாட்டிலே காவிரி நதிக்குத் தெற்கிலே திருக்களரிக்கு நிருதி திசையிலே ஒரு கூப்பிடு தூரத்திலேயுள்ள களந்தைப் பதியிலே குறுநில மன்னர் மரபிலே திருவவதாரம் புரிந்தவர். களப்பாளன் என்னும் திருநாமம் பெற்றவர். களந்தையைத் தன்பெயரால் கோவில் களப்பாள், துயில் களப்பாள், அகரக் களப்பாள், பெரிய களப்பாள், நடு(நடுவக்)களப்பாள், நறுவீழிக் களப்பாள், அகரநறுவீழிக் களப்பாள்  என ஏழு கூற்றாகப் பிரித்தமையால் கூற்றுவன் என்னும் பெயர் பெற்றார்.
களந்தையில் பிறந்தவர், திருவாரூரில் பிறந்தவர் அடையும் பதத்தையும் இறந்தவர், காசியில் இறந்தவர் அடையும் பதத்தையும் அடைவர்.. களந்தைப் பதியைத் தரிசித்தவர், தில்லையைத்  தரிசித்தவர் பெறும் பேற்றையும் நினைத்தவர் ,திருவருணையை நினைத்தவர் பெறும் பேற்றையும் பெறுவர்.- திருக்களர் தி.மு. சுவாமிநாத உபாத்தியாயர்,களப்பாள் சிவஷேத்திர விளக்கம்,1911.--முற்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக