படைப்பாளன் பின்னே மக்கள் செல்ல வேண்டும்
மக்கள் பின்னே படைப்பாளன் செல்லக்கூடாது.
இயக்குநர் சற்குணம்:- மக்களைத் தன்வயப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்கிறார் களவாணி, வாகைசூடவா, இரண்டு வெற்றிப் படங்களை அளித்துத் தமிழ்த் திரை உலகினரைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் . தமிழ்த் திரைக்கே உரித்தான மட்டமான சினிமாத்தனம் எதுவும் இல்லாத தனித்துவமான படைப்புகள் இவை.வாகை சூட வா - ஓர் அழுத்தமான கதைக் கருவைக் கொண்டது. ஏழ்மைக்கும் வறுமைக்கும் கல்லாமையே காரணம்.முதலாளித்துவத்தின் உழைப்புச் சுரண்டலை ஒழிக்கும் கல்விப் புரட்சியை மிக மென்மையாக அதே நேரத்தில் மிக அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்ட முறை, ஒரு மிகச் சிறந்த விருதுக்கு உரிய படமாக மிளிர்கிறது.
தமிழ்த் திரை உலகில் சற்குணம் தனித்துப் பயணிக்கிறார்.. மிகத் துணிச்சலாக........
எதார்த்தம் என்ற பெயரில் அருவருப்புகளைப் படமாக்கிப் பணம் பார்த்த திரைத் துறையினர் நடுவே எதார்த்தத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளார் சற்குணம். அவர் படைத்த உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் ஆற்றல் வாய்ந்த இயக்குநர் சற்குணம் பாராட்டுக்குரியவர்.
கதை நாயகி இனியா- முகத்தில் நடனமாடும் நடிப்பு. கள்ளமில்லா வெள்ளை உள்ளங்களின் கலகலப்பான உரையாடல்கள், குழந்தைகளின் குறும்புத்தனங்கள் இனியாவைப் போல் இனிக்கின்றன. இனியாவை அறிமுகத்திலேயே அசத்திய இயக்குநருக்கு மேலும் ஒரு விருது கொடுக்கலாம் இனியாவுக்கும். கொடுக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக