நற்றிணை – அரிய
செய்தி – 52 -55
நீர் நாய்
…………………… இருங்கழிக்
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி
தில்லைஅம் பொதும்பில் பள்ளி கொள்ளும்
………………… நற். 195 : 1 – 3
கருமை பொருந்திய உப்பங்கழியில் உள்ள நீர் நாயின் இளங்குட்டி
கொழுமையான மீன்களை நிரம்பத் தின்று; தில்லை
மரப்பொந்துகளில் படுத்துக்கிடக்கும். ( விலங்குகளின் வாழிடம் )
நற்றிணை – அரிய
செய்தி – 53
நிலவு அறிவியல்
நிற்கரந்து உறையும்
உலகம் இன்மையின்
எற்கரந்து உறைவோர் உள்வழி
காட்டாய்
வெள்ளைக்குடி நாகனார். நற். 196 : 5 -‘6
நிலவே ! உனக்குத் தெரியாத உலகம் ஒன்று இல்லையாகலானும் எனக்குத்
தெரியாது மறைந்து ஒழுகும் என் காதலர் இருக்கும் இடத்தை எனக்குக் காட்டுவாய். ( ஒரே நிலவு உலகம் முழுதும்)
நற்றிணை – அரிய
செய்தி – 54
தந்தத்தில் முத்து
புலிபொரச் சிவந்த புலால் அம் செங்கோட்டு
ஒலிபல் முத்தம் ஆர்ப்ப -------
பாலை பாடிய பெருங் கடுங்கோ. நற். 202 : 1 -2
இளமகளே ! நீ வாழ்க யானை புலியுடன் போர் புரிந்ததால் இரத்தம்
தோய்ந்து சிவந்ததும் - புலால் நாற்றம் வீசுவதுமான
செவ்விய தந்தத்தின் அடியில் முத்துக்கள் திரண்டிருக்கும் . ( விலங்கியல் வழி ஆய்க)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக