நற்றிணை – அரிய
செய்தி – 34 --- 36
நட்பு
பழகிய பகையும் பிரிவு இன்னாதே
……………… நற்108: 6
பழகியிருந்து பின் பகைவரானவர் தம்மை விட்டுப் பிரியினும் நட்பு
கொண்டோர்க்கு அஃது இன்னாமையே ஆகுமன்றோ…!
நற்றிணை – அரிய
செய்தி – 35
மழை – அறிவியல்
……………………. இன் நீர்த்
தடங் கடல் வாயின் உண்டு சில் நீர் என
…………………. நற்.115 : 3 – 4
மேகங்களும் இனிய நீரையுடைய
பெரிய கடலகத்து வாயினால் உண்டு – எஞ்சிய கடலின் நீர் சிறிது நீர் என்னும்படி கொணர்ந்தன.
நற்றிணை – அரிய
செய்தி – 36
சூல் கெடுமே
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று
இருவெதிர் ஈன்றவேல் தலைக் கொழுமுளை
சூல்முதிர் மடப்பிடி நாள் மேயல் ஆரும்
கந்தரத்தனார். நற். 116 : 3-5
சூல் முதிர்ந்த இளைய
பெண் யானை ; தன் வயிற்றுச் சூல் கெட்டுப் புறத்தே
வெளிப்படுமாறு பெரிய மூங்கிலின் முளைத்து எழுந்த
; இலையில்லாத கொழுத்த முளைப்பகுதியை அறியாது
தின்னும்.
மூங்கில் முளையைத் தின்றால் பிடியின் சூல் கெட்டுவிடுமா ? விலங்கியல்
நோக்கில் ஆய்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக