வியாழன், 10 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 47-48

     நற்றிணை – அரிய செய்தி – 47-48             
மணி மகுடம்
பொன்னும் மணியும் போலும் யாழநின்
நன்னர் மேனியும் நாறிருங் கதுப்பும்
…………………………………
காதல் தானும் கடலினும் பெரிதே.
……………….. நற். 166.
 இப்பாடலை இயற்றிய புலவரின் பெயர் தெரியவில்லை. சொற்சுவையும் பொருட் சுவையும் மலிந்து காதல் சிறப்புரைக்கும்பாடலாகத் திகழ்கிறது.
“ இனி இச்செய்யுட்கு ஒப்பான சிறந்த செய்யுள் கிடைத்தல் அரிது: தமிழ் இலக்கியத்தின் மணிமுடியாக இதனைக் கொள்ளலாம் “ என்கிறார் உரையாசிரியர் பொ. வே. சோமசுந்தரனார்.
  பத்து அடிகளைக் கொண்ட இப்பாடல்- முதல் ஐந்து அடிகளில் தலைவனுக்குக் காணுந் தோறும் இன்பம் தரும் தலைவியின் அழகு வருணிக்கப் படுகின்றது’; எஞ்சிய ஐந்து அடிகள் பொருளினும் காதலே சிறந்தது எனக் கூறித் தலைவன்  ”பிரியேன்” எனக் கூறுதலை விளக்குகின்றன.
     நற்றிணை – அரிய செய்தி – 48             
தோற்றோடிய ஆரியப் படை
  ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்
 பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடியாங்கு ……….
…………………… நற். 170 : 6 – 8

முள்ளூர் மன்னன் மலையமான் திருமுடிக்காரி ஆரியப்படையைப் போர்க் களத்தில் எதிர்த்து நின்றான்;  மலையனது ஒப்பற்ற வேற்படைக்கு அஞ்சி ஆரியப் படை தோற்றோடியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக