மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 14
குறிஞ்சி நில
வளம்
நறுங்காழ்
கொன்று கோட்டின் வித்திய
குறுங்கதிர்த்
தோரை நெடுங்கால் ஐயவி
ஐவன
வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி
இஞ்சி
மஞ்சள் பைங்கறி பிறவும்
பல்வேறு
தாரமொடு கல்லகத்து ஈண்டி
மாங்குடி
மருதனார், மதுரைக். 6:
286 – 290
மணம்
கமழும் அகிலையும் சந்தனத்தையும் வெட்டி, மேட்டு
நிலங்களில் விதைக்கப்பட்ட குறிய கதிர்களையுடைய தோரை என்னும் நெல்லும், நெடிய தாளினையுடைய
வெண்சிறு கடுகும், ஐவன நெல் என்னும் வெண்ணெல்லுடன் பிணைந்து வளர்ந்த இஞ்சியும், மஞ்சளும்,
பசுமை வாய்ந்த மிளகுக் கொடியும், மேலும் பல்வேறு பண்டங்களும் கல் தரையில் குவிக்கப்பட்டிருக்கும்.
( காழ்
– வயிரம் பாய்ந்த அகில், சந்தனம் ; கோடு – மேட்டு நிலம் ; தோரை - மூங்கில் நெல் ; ஐயவி – வெண்சிறுகடுகு ; ஐவனம்
– வெண்ணெல் ; தாரம் – பண்டம் ; கறி – மிளகு .)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக