மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 19
நெடியோன் –
சிவன்
நீரும்
நிலனும் தீயும் வளியும்
மாக
விசும்போடு ஐந்துடன் இயற்றிய
மழுவாள்
நெடியோன் தலைவன் ஆக
மாங்குடி மருதனார்,
மதுரைக்.
6: 453 – 455
திசைகளை
உடைய ஆகாயத்துடன், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற ஐந்து பூதங்களையும் சேரப்படைத்த
மழுப்படையாகிய வாளினையுடைய பெரியோன் – ஏனையோரின் முதல்வன் ஆவான்.
சிவபெருமான்,
நெடியோன் என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளான்.
( மாகம்
– திசை ; மழு – சிவன் கையில் உள்ள வாள் ; நெடியோன் ; சிவபெருமான்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக