மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 5
தமிழ்நாட்டின்
எல்லைகள்
தென்குமரி வடபெருங்கல்
குணகுட
கடலா எல்லைத்
தொன்று
மொழிந்த தொழில் கேட்ப
மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 70 - 72
தெந்திசையில்
குமரியை எல்லையாகவும். வடதிசையில் பெரிய மேரு மலையை எல்லையாகவும், கீத்திசையிலும் மேற்றிசையிலும்
கடலை எல்லையாகவும் கொண்டு இடைப்பட்ட நிலப்பரப்பில் வாழ்வோர் யாவரும், தம்முடன் பாண்டியனுக்கு
உள்ள பழமையைச் சொல்லி அவன் ஏவல் கேட்டு ஒழுகுமாறு வெற்றியோடு சிறந்து வாழ்ந்த….
மேலும்
காண்க : வடாஅது பனிபடு நெடுவரை…. புறநா. 6
. தென்குமரி வடபெருங்கல் …… புறநா. 17.
( வரை
– மலை ; மிளை – காவற்காடு ; கிடங்கு – அகழி ;
வட பெருங்கல் – இமய மலை ; வெற்றம் – வெற்றி.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக