வெள்ளி, 4 மார்ச், 2016

முல்லைப்பாட்டு – அரிய செய்தி : 4

முல்லைப்பாட்டு – அரிய செய்தி : 4

நற்போர்
கல்தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோல் அசைநிலை கடுப்ப நல்போர்
ஓடா வல்வில் தூணி நாற்றி
கூடம் குத்திக் கயிறுவாங்கு இருக்கை
பூந்தலைக் குந்தம் குத்தி கிடுகு நிரைத்து
வாங்குவில் அரணம் அரணமாக 
                                        நப்பூதனார், முல்லைப். 5 :  37 – 42

துகிலைக் காவிநிறந் தோய்த்து உடுத்த தவ வேடம் உடையவனும் முக்கோல் உடையவனும் ஆகிய பார்ப்பான் அம்முக்கோலை நட்டு அதன் மேல் தன் ஆடையை இட்டு வைத்ததைப் போல – அறநெறியால் தாம் செய்கின்ற போரில் புறமுதுகிட்டு ஓடாமைக்குக் காரணமான வலிய வில்லை சேர ஊன்றி, அவற்றின் மேல் தூணிகளை தொங்கவிட்டுள்ளனர். வீரர்கள், கூடாரமாகக் கால்களை நட்டுக் கயிற்றால் வலித்துக் கட்டின இருக்கைகளில்  குந்தக் கோல்களை நட்டுக் கிடுகுப் பட்டைகளை நிரலாகப் பிணைத்து அமைக்கப்பட்டுள்ளது, பல்வேறு மறவர்கள் தங்கும் பாசறை.
(படிவம் – நோன்பு ;  தூணி – அம்புக்கூடு ; குந்தம் – எறிகோல் ; கிடுகு – கேடகம் ; நற்போர் – அறநெறி பிறழாத போர்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக