முல்லைப்பாட்டு – அரிய செய்தி : 1
மழை – அறிவியல்
நனந்தலை உலகம்
வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த
மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த
மாஅல் போல
பாடுஇமிழ் பனிக்கடல்
பருகி வலன் ஏர்பு
கோடு கொண்டு
எழுந்த கொடுஞ்செலவு எழிலி
பெரும்பெயல்
பொழிந்த சிறுபுன் மாலை
நப்பூதனார், முல்லைப். 5 : 1 – 6
அலையோசை
முழங்கும் குளிர்ந்த கடல்நீரைக் குடித்து எழுந்த மேகம், இடமகன்ற உலகத்தை வளைத்து, வலமாக
உயர்ந்தெழுந்து, மலைகளில் தங்கிப் புல்லிய மாலைப் பொழுதில் பெருமழையைப் பொழிந்தது.
இக்காட்சி, சக்கரத்தொடு வலம்புரிச் சங்கினை ஏந்திய கைகளையும், திருமகளை வைத்த மார்பினையும்
உடைய திருமால், வாமனனாகச் சென்று இரந்தபோது, மாவலி வார்த்த நீர் கையில்பட்ட அளவில்,
விண்ணையும் மண்ணையும் அளாவும்படி உயர்ந்ததுபோல விளங்கியது.
( நனந்தலை
– அகன்ற இடம் ; நேமி – சக்கரப்படை ; மாஅல் – திருமால் ; பாடு – ஓசை ; ஏர்பு – எழுந்து
; கோடு – மலை ; எழிலி – மேகம் . )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக