வியாழன், 3 மார்ச், 2016

முல்லைப்பாட்டு – அரிய செய்தி : 3

முல்லைப்பாட்டு – அரிய செய்தி : 3
யானையைப் பயிற்றுதற்குரிய மொழி
உவலைக் கூரை ஒழுகிய தெருவில்
கவலை முற்றம் காவல் நின்ற
தேம்படு கவுள சிறுகண் யானை
ஓங்குநிலைக் கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த
வயல்விளை இன்குளகு உண்ணாது நுதல்துடைத்து
அயில்நுனை மருப்பிந்தம் கையிடைக் கொண்டென
கவைமுள் கருவியின் வடமொழி பயிற்றி
கல்லா இளைஞர் கவளம் கைப்ப
                நப்பூதனார், முல்லைப். 5 :  29 – 36
ஒழுங்குபட்ட தெருவின்கண், தழை வேய்ந்த கூரை நாற்சந்தி முற்றத்துக் காவலாக நின்ர, மதம் பாய்கின்ற கதுப்பினையும், சிறிய கண்களையும் உடைய யானை, வளர்ந்த கரும்போடு,வயலின்கண் விளைந்த கதிர்களை நெருங்கப் பொதிந்த சாலியையும், அதிமதுரத் தழையையும் தின்னாமல், அவற்றால் தம் நெற்றியைத் துடைத்துக் கூரிய தம் கொம்பில் கிடத்த, கவைத்த முள்ளையுடைய பரிக்கோலால், கல்லா இளைஞர்கள், யானைப் பேச்சால் வடமொழிகளைப் பலகாலும் சொல்லிக் கவளத்தைத் தின்னும்படி குத்த…
இச்செய்தி சீவகசிந்தாமணியிலும் (1834) இடம் பெற்றுள்ளது. யானைப்பாகன் வடமொழியில் ஆணையிடுவது குறித்து ஆய்க.
( கவலை – நாற்சந்தி ;  தேம்படுகவுள – மதம் வழியும் கன்னம் ; இன்குளகு – இனிய அதிமதுரத் தழை ; கைப்ப – தின்னுமாறு குத்த.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக