முல்லைப்பாட்டு – அரிய செய்தி : 5
வீர மங்கையர்
குறுந்தொடி
முன்கை கூந்தல் அம் சிறுபுறத்து
இரவுபகல்
செய்யும் திண்பிடி ஒள்வாள்
விரவுவரிக்
கச்சின் பூண்ட மங்கையர்
நெய்
உமிழ் கரையர் நெடுந்திரிக் கொளீஇ
கைஅமை
விளக்கம் நந்துதொறும் மாட்ட
நப்பூதனார், முல்லைப். 5 : 45
– 49
அரசனுக்கென
அமைந்த பாசறையின்கண், குறிய தொடியணிந்த முன்கையினையும், கூந்தல் அலைகின்ற சிறு முதுகினையும்
உடைய, இரவைப் பகலாக்கும் ஒளி பொருந்திய திண்மையான பிடியமைந்த வாளினைக் கச்சோடு சேர்த்துக்
கட்டிய மகளிர், பாவை விளக்கில் நீண்ட திரியை இட்டு, நெய் வார்க்கும் குழாயால் நெய்
வார்த்து விளக்கேற்றுகின்றனர். வாள் புனைந்த வீர மங்கையர்.
( தொடி
– வளையல் ; திண்பிடி – திண்ணிய கைப்பிடி ; கையமை விளக்கம் – பாவை விளக்கு )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக