மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 9
தலையாலங்கானத்து
வெற்றி வீரன்
கால்
என்னக் கடிது உராய்அய்
நாடு
கெட எரிபரப்பி
ஆலங்கானத்து
அஞ்சுவர இறுத்து
அரசுபட அமர் உழக்கி
முரசு
கொண்டு களம் வேட்ட
அடுதிறல்
உயர்புகழ் வேந்தே
மாங்குடி மருதனார்,
மதுரைக். 6: 125 – 130
காற்றினைப்
போல் விரைவாகப் பரந்து சென்று பகைவர் நாடுகள் அழியுமாறு தீயிட்டுக் கொளிவினான்.
தலையலங்கானம் என்னும் ஊரில் பகைவர்க்கு அச்சம் தோன்றும்படித்
தங்கி, நெடுநில மன்னர் இருவரும், குறிநில மன்னர் ஐவரும் இறந்துபடுமாறு போரில் அவர்களை
வென்று, அவர்களுடைய முரசங்களைக் கைக்கொண்டு
களவேள்வி செய்த கொல்லுகின்ற வலிமை மிகுந்த புகழையுடைய வேந்தே.
எழுவர்
: சேரன், செம்பியன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் ஆகியோர்.
நெடுஞ்செழியனின் தலையலங்கானத்து வெற்றி இதனால்
கூறப்பட்டது. பகைவர் எழுவரை வென்றதினால் இவன் தலையலங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியன்
எனப்பட்டான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக