மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 20
ஐவகை ஒழுக்கம்
–பஞ்சசீலம்
தாது
அணி தாமரைப் போது பிடித்தாங்கு
தாமுன்
அவரும் ஓராங்கு விளங்கக்
காமர்
கவினிய பேரிளம் பெண்டிர்
பூவினர்
புகையினர் தொழுவளர் பழிச்சிச்
சிறந்து
புறங்காக்கும் கடவுட் பள்ளியும்
மாங்குடி மருதனார், மதுரைக். 6: 463 – 467
திண்ணிய
ஒளியையுடைய பேரணிகலன்களை அணிந்து, விருப்பம் பொருந்திய அழகினோடு, பேரிளம் பெண்டிர், கணவரோடு கூடித் தாது சேர்ந்த செவ்வித் தாமரைப்
பூவைப் பிடித்தாற்போலத் தம் ஒள்ளிய சிறு பிள்ளைகளை எடுத்துக் கொண்டு, தாமும் தம் கணவரும்
தம் பிள்ளைகளும் ஒருசேர சீலத்தால் சிறந்து விளங்கும்படி, பூசைக்கு வேண்டும் பூவினையும்
தூபங்களையும் ஏந்தி வணங்கி, மிகுதியாகத் துதித்துப் பாதுகாத்து நடத்தும் பெளத்தப் பள்ளியும்…
( மதாணி
- பேரணிகலன் ; குறு மாக்கள் – சிறு பிள்ளைகள்
; ஓராங்கு – சீலத்தால் சிறந்து விளங்க ; சீலம்
- கொல்லாமை, கள் உண்ணாமை, பொய் கூறாமை, கள்ளாமை,
பிறன்மனை நயவாமை என்பன - இவை பஞ்ச சீலம் எனப்படும். )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக