முல்லைப்பாட்டு
– அரிய செய்தி
முன்னுரை
பத்துப்பாட்டில்
ஐந்தாவதாக இடம்பெற்றுள்ள முல்லைப்பாட்டு அகம் சார்ந்த நூலாகும். 103 அடிகளைக் கொண்டிலங்கும்
இப்பாட்டு பத்துப்பாட்டுள் மிகச் சிறியதாகும். இதனைப் பாடியவர் காவிரிப்பூம் பட்டினத்துப்
பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார். சங்க இலக்கியத் தொகை நூல்களில் இவர் பாடியதாக
வேறு எந்தப்பாடலும் காணப்படவில்லை.
புலவர் நப்பூதனார் ’ நல்லொழுக்கமுடன் வல்லென்ற இயல்பும்,
அறிவாழமும் மிக்க மனவமைதியும் உடையவரென்பது குறிப்பாக அறியப்படும்’ என்று ‘முல்லைப்பாட்டு
ஆராய்ச்சி உரை’ யில் மறைமலையடிகள் குரிப்பிடுவார்.
முல்லைப்பாட்டு, முல்லைத்திணையின் இயல்புகளை மட்டுமல்லாமல். ‘ வஞ்சிதானே
முல்லையது புறனே’ (தொல். புறத்.61) எனத் தொல்காப்பியம் கூறுவதற்கேற்ப, வஞ்சித்திணை
இயல்புகளையும் இயைத்துப் பாடுகின்றது.
’ முல்லை
சான்ற கற்பு’ – என்று கற்புடன் தொடர்புபடுத்திப் பேசப்படும் இத்திணையின் உரிப்பொருள்
“ இருத்தல்” ஆகும். அஃதாவது இருத்தலும் இருத்தல் நிமித்தமும் ஆகிய முல்லை உரிப்பொருளாம்.
போர், கல்வி, பொருள்தேடல் ஆகிய காரணங்களால்
பிரிந்துசென்ற தலைவன் கார்காலத் தொடக்கத்திற்குள் வந்து விடுவதாகக் கூறிப் பிரிவான்,
அவ்வாறு அவன் திரும்பி வரும்வரை ஆற்றியிருத்தல்
தலைவியின் கடமையாகும் . இதுவே முல்லத்திணை என்று சிறப்பித்துப் பேசப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக