சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 13
நெய்தல்நில
வருணனை
செம்மல் உள்ளமொடு
செல்குவிர் ஆயின்
அலைநீர்த் தாழை
அன்னம் பூப்பவும்
தலைநாள் செருந்தி
தமனியம் மருட்டவும்
கடுஞ்சூல் முண்டகம்
கதிர்மணி கழாஅலவும்
நெடுங்காற்
புன்னை நித்திலம் வைப்பவும்
கானல் வெண்மணல்
கடல் உலாய் நிமிர்தர
பாடல் சான்ற
நெய்தல் நெடுவழி
இடைக்கழிநாட்டு
நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 145 –
151
பாணன் தான்
பெற்ற பெருவளத்தினைப் பெறாத பாணனனுக்கு – நீயிர்
ஐயுறவு கொள்ளாது அவ்வள்ளலிடம் செல்லுக என்று அறிவுறுத்தினான்.
அங்ஙனம் சென்றால் நெய்தல் வளமிக்க அவனுடைய எயிற்பட்டினத்தைஎ அடைவீர்; அவ்வூர்க் கடற்கரையின்கண்…..
அன்னம் போன்று (வெண்) தாழை மலர்ந்திருக்கும்
பொன்போன்று
செருந்தி செறிந்து தோன்றும்
நீலமணி போலும்
கழிமுள்ளி ஒளியுடன் விளங்கும்
நித்திலம் போலும்
செழித்த புன்னை அரும்புகள்
கரையில் படர்ந்துள்ள
வெள்ளிய மணற்பரப்பில் கடல் பரந்து ஏறுகின்ற நெய்தல் நில நெடு வழியே --- செல்வீராக.
( உவமைகளின்
ஒப்புமை அழகு குறித்து ஆய்க. வேலூர் – முல்லை நில வருணனை ; ஆமூர் – மருத நில வருணனை …. நூலில் கண்டுணர்க.)
நாட்போது
– அன்றலர்ந்த மலர் ; கொங்கு – தேன் ; குட்டம் – குளம் ; வியல் நகர் – அகன்ற இல்லங்கள் ; கிடங்கு – அகழி
.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக