பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 8
வீர மங்கை
யானை தாக்கினும் அரவு மேல் செலினும்
நீல் நிர விசும்பின்
வல்லேறு சிலைப்பினும்
சூல்மகள் மாறா
மறம்பூண் வாழ்க்கை
கடியலூர்
உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 : 134 -
136
யானை தன்னைத்
தாக்க வந்தாலும், தன்மேல் பாம்பு ஊர்ந்து சென்றாலும், இடி இடித்தாலும் கருவுற்ற பெண்கூட இவற்றிற்கெல்லாம் அஞ்சாத - மறத்தன்மை மிக்க வாழ்க்கை குறிஞ்சி நில மக்கள்
வாழ்க்கை.
( தோப்பி – வீட்டிலேயே நெல்லாற் சமைத்த கள் என்பதை
‘இல் அடு கள் இன் தோப்பி’ என்னும் தொடரால் பெற வைத்தார் ஆசிரியர். இக்கள் பிற கள்ளை
விட இனிமையுடையதாய் இருக்கும் என்பதால் ‘இன் தோப்பி’ என்றார்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக