பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 18
கள் அடு மகளிர்
கள்
விற்கும் இடம் என்பதைக் குறிக்க அடையாளக் கொடி
(பச்சைக்கொடி) பறக்கவிடுவதும் ; கள்ளை வீட்டிலேயே பெண்கள் சமைத்தலும் ; ஆண் பன்றிக்கு அரிசி மாவு
கொடுத்துக் கொழுக்கச் செய்து தசையை உண்ணுதலும் அக்காலத்தில் இருந்தமையை அறியலாம். தோப்பி
– நெல்லாற் சமைத்த கள்.
…… ….. ……
முட்டுஇல்
பைங்கொடி
நுடங்கும் பலர்புகு வாயில்
செம்பூத்
தூஉய செதுக்குடை முன்றில்
கள்
அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்து
உகு சில்நீர் வழிந்த குழம்பின்
ஈர்ஞ்சேறு
ஆடிய இரும்பல் குட்டிப்
பல்மயிர்
பிணவொடு பாயம் போகாது
கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 : 337 - 343
“முட்டில்”
கள்ளுக்கடையில் கள் உண்பதற்காக பலர்
புகினும் கள் இல்லை என்னாது தட்டுப்பாடில்லாமல்
வழங்கும் வாயில் – பச்சை நிறக்கொடிகள் அசைகின்ற , செதுக்கி அழகுடன் அமைந்த புல்
படர்ந்த செவ்விய மலர்கள் தூவப்பட்ட முற்றத்தினைக் கொண்ட இடம் , கள்ளுண்ணப் பலரும் புகும்
வாயில் -
கள்ளைச் சமைக்கின்ற மகளிர் வட்டிலைக் கழுவியதனால் வடிந்த நீர் குழம்பி ஈரமாகிய
சேற்றினை அளைந்து கொண்டிருக்கும் கரிய பல குட்டிகளையுடைய பெண் பன்றிகள் – அவற்றுடன் புணர்ச்சியை விரும்பிப்
போகாதபடி பாதுகாத்து – நெல்லை இடித்து மாவாக்கி அதை உணவாக்கிக் கொடுத்துப் பல நாளும்
குழியியிலே நிறுத்தி வளர்த்த குரிய காலையுடைய ஆண் பன்றியின் கொழுவிய நிணமுடைய தசையுடன்
– களிப்பு மிக்க கள்ளையும் முட்டுப்பாடில்லாமல் பெறுவீர்.
( பச்சைக்
கொடி – கள்ளுக்கடையின் அடையாளம் –’ கட்கொடி நுடங்கும் ஆவணம்’ , பதிற். ‘ நெடுங் கொடி நுடங்கு நறவுமலி மறுவில்’ (அகம்),
’கள்ளின் களி நவில் கொடி ‘(மதுரைக்.)’ நறவுநொடைக் கொடியொடு’ (பட்டினப்.) எனவும் வருதலைக்
காண்க. நுடங்க – அசைய ; பைங்கொடி – பச்சைக்கொடி ;
அடுதல் – சமைத்தல் ;இருமை – கருமை ; பிணவு – பெண் பன்றி ; குறுந்தாள் ஏற்றை ; குறிய கால்கள் உடைய ஆண் பன்றி
; தடி – தசை ; கூர்நறா – களிப்பு மிக்க கள்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக