மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 24
பண்டங்கள் பகர்நர்
அறநெறி
பிழையாது ஆற்றின் ஒழுகி
குறும்பல்
குழுவின் குன்று கண்டன்ன
பருந்து
இருந்து உகக்கும் பல்மாண் நல் இல்
பல்வேறு
பண்டமோடு ஊண்மலிந்து கவனி
மலையவும்
நிலத்தவும் நீரவும் பிறவும்
பல்வேறு
திருமணி முத்தமொடு பொன்கொண்டு
சிறந்த
தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்
மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 500 –
506
இல்லற
நெறியில் பிறழாது இல்வாழ்க்கை நடத்துபவர். அவர்கள், அண்மையில் அமைந்துள்ள பல திரட்சியுடைய
மலையைக் காண்பது போல் - பருந்து இளைப்பாறி
இருந்து பின் உயரப்பறக்கும் பல தொழிலால் மாட்சிமைப்பட்ட நல்ல இல்லில் – பலவாய வேறுபட்ட
பண்டங்களையும் பல உணவுகளையும் – நிலத்திடத்தும் நீரிடத்தும் பிறவிடத்தும் கிடைக்கும்
பொருள்களையும் – பலவாய வேறுபட்ட அழகிய மணிகள்
முத்துக்கள் பொன் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு விற்பனை செய்வர்.
( பண்ணியம்
– பண்டம் ; ஊண் – உணவு ; உகக்கும் – உயரப்
பறக்கும் – தேஎத்து – நாட்டிடத்து.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக