மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 25
கோசர்
பழையன்
மோகூர் அவையகம் விளங்க
நான்
மொழிக் கோசர் தோன்றியன்ன
மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 508 – 509
மோகூர் பழையன் என்னும் குறுநில மன்னன் – இவ்வூரின்
தலைவன் – இவ்வூரில் உள்ள நன்மக்கள் கூட்டத்தில் விளங்கும்படி அறியக்கூறிய நான்குவகையான
கோசர்கள் – தங்கள் வஞ்சின மொழியால் விளங்கினாற் போல….
கோசர்
– வஞ்சினம் பிறழாதவர் – வாய்மொழி உரைப்பவர் – கூலிப்படையினர்.” மெய்ம்மலி பெரும்பூண்
செம்மல் கோசர் –குறுந்.73.”
“வாய்மொழிக் கோசர் –அகநா. 196” – ”இளம்பல் கோசர்”,
புறநா. 169, 283, 396, 12.
“
இந்தியாவின் பாரம்பரிய வீடுகளில் பிரசித்திப்பெற்றது பந்த் சமூகத்தினரின் குத்தூ வீடுகள்.
பந்த் சமூகத்தினரின் தாய்மொழி துளு, இம்மொழியில் பந்த் என்றால் வீரன் என்று பொருள்.
இதிலிருந்து பந்த் சமூகம் சத்திரிய குலமாக இருந்திருக்கிறது எனத் தெரிந்து கொள்ளலாம்.
இவர்கள் கர்நாடக மாநிலத்தின் தென் கனரா மாவட்டத்தில் அதிகமான அளவில் வாழ்கிறார்கள்
இந்தப் பகுதி முற்காலத்தில் துளு நாடு என அழைக்கப்பட்டது.
துளு
நாட்டு அரச வம்சம் கி.மு. 3 ஆம் நுற்றாண்டிலிருந்து கி.பி. 4ஆம் நூற்றாண்டுவரை ஆட்சிப்பொறுப்பில்
இருந்ததாக வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. அரசர்கள் கோசர்கள் என அழைக்கப்பட்டனர். துளுநாடு
இன்றைய கேரளத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதியாக இருந்திருக்கிறது.” (ஜெய்,
தி இந்துதமிழ், 13/2/16)
பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்கு