மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 29
மகளிர் குளத்து
நீராடல்
கணவர்
உவப்ப புதல்வர்ப் பயந்து
பணைத்து
ஏந்து இளமுலை அமுதம் ஊற
புலவுப்
புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு
வளமனை
மகளிர் குளநீர் அயர
மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 600 – 603
தம்முடைய கணவர் இம்மையிலும் மறுமையிலும் பெரும் பயனைப்
பெற்றேம் என்று மகிழும்படி புதல்வர்களைப் பெற்றுப் பாலால் இடம்கொண்டு ஏந்திய இளமுலை,
பாலைச் சுரக்கும்படி, புலால் வீசும் ஈன்றணிமை நீங்கி , எவ்வகையான இன்னலும் இல்லாமல்
நீங்கிக் குளத்து நீரில் குளிப்பர்,
முதல்
சூல் கொண்ட மகளிர், இவ்வாறே இடுக்கண் இல்லாமல் புதல்வரைப் பெறல் வேண்டும் என்று தெவத்தைப்
பரவிக் குறை நீங்கப் பெறுவர்.
கருவுயிர்த்த
மகளிர், குளத்து நீரில் நீராடி, வாலாமை நீங்கப் பெறுவர்.
( கடுஞ்சூல்
– முதற்சூல் ; அமுதம் – பால் ; புனிறு - ஈன்றணிமை.)
நன்று. தொடர்ந்து படிக்கிறேன்.
பதிலளிநீக்கு