குறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி
: 2
யார்க்கும்
எளிதன்று……
முத்தினும்
மணியினும் பொன்னினும் அத்துணை
நேர்வரும்
குரைய கலம் கெடின் புணரும்
சால்பும்
வியப்பும் இயல்பும் குன்றின்
மாசுஅறக்
கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்
ஆசுஅறு
காட்சி ஐயர்க்கும் அந்நிலை
எளிய
என்னார் தொல் மருங்கு அறிஞர்
கபிலர், குறிஞ்சிப் . 13 – 18
சிறந்த
இலக்கணங்களையுடைய முத்தானும் மானிக்கத்தானும் பொன்னாலும் பொருந்தியவாறு செய்யப்பெற்ற
அணிகலன்கள் கேடு அடையினும் அவற்றைச் சீர் செய்து கொள்ள இயலும். அது போலன்றித் தத்தம்
குணங்களின் அமைதியும் மேம்பாடும் ஒழுக்கமும் தம்முடைய பழைய இயல்பினின்றும் கெட்டதாயின், அதனால் பிறந்த அழுக்கை நீங்கும்படிக்
கழுவி, விளங்கும் புகழை முன்புபோல நிற்கும்படி நிலைநிறுத்துதல் குற்றமற்ற அறிவினையும்
தெய்வத்தன்மையையும் உடைய முனிவர்கட்கும் எளிய செயலன்று எனப் பழைய நூலை அறிந்த அறிஞர்
கூறுவர்.
( கலம்
– அணிகலன்; சால்பு – நிறைவு ; வியப்பு
- பெருமிதம் ; இயல்பு – ஒழுக்கம் . )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக