நெடுநல்வாடை அரிய செய்தி : 5
கணப்புச் சட்டி
கல்லென்
துவலை தூவலின் யாவரும்
தொகுவாய்க்
கன்னல் தண்ணீர் உண்ணார்
பகுவாய்த்
தடவில் செந்நெருப்பு ஆர
நக்கீரர், நெடுநல் . 7: 62 – 64
வாடைக்காற்று இப்பருவத்தில் ’கல்’ என்ற ஓசையுடன்
எங்கும் மழைத் துளிகளைத் தூவிற்று, இளையரும் முதியரும் குவிந்த வாயினை உடைய நீருண்
கலத்தில் இருக்கும் தண்ணீரை, நீர் வேட்கையின்மையால், பருக விரும்புவதில்லை, அவர்கள்
உடல் குளிர்ச்சியைப் போக்க, பிளந்த வாயினை உடைய நெருப்புக்குண்டத்திலிருந்து ( கணப்புச்
சட்டி) வெளிப்படும் தீயின் வெம்மையை நுகர்ந்தனர்.
(கன்னல்
– கரகம், வட்டில் ; தடவு ; குண்டம், தூபமூட்டி.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக