நெடுநல்வாடை அரிய செய்தி : 11
நெடு – நல்
– வாடை
நள்ளென்
யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு
திரிதரும் வேந்தன்
பலரொடு
முரணிய பாசறைத் தொழிலே
நக்கீரர், நெடுநல் . 7:186 – 188
அரசன், ’நள்’ என்னும் ஓசையையுடைய நடுயாமத்தும், உரங்காச்
செல்லாமல், சில வீரர்களுடன் பாசறையில் புண்பட்டோரின் வருத்தத்தைப் போக்குவதற்காகத்
திரிந்த வண்ணம் இருந்தான்.
சேரன்,
சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என்ற எழுவருடன் மாறுபட்டுப்
பாசறைக்கண் தங்கி, அரசன் செய்யும் போர்த் தொழிலில் அவனுக்கு வெற்றியைத் தந்து இப்பொழுதே
முற்றுப் பெறுவதாக என்று செவிலித்தாய், கொற்றவையை வழிபட்டு வேண்டினாள்.
அரசமாதேவிக்குப்
பிரிவாற்றாமையைத் தந்த நெடிய வாடை, அரசனுக்குப் பாசறைத் தொழிலில் ஊக்கத்தை மிகுவித்தலால்
நல்ல வாடையாயிற்று.
மதுரைக் கணக்காயனார்
மகனார் நக்கீரனார் பாடிய,
நெடுநல்வாடை: முற்றும். நாளை முதல் குறிஞ்சிப்பாட்டு ...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக