திருக்குறள்
– சிறப்புரை :579
ஒறுத்தாற்றும்
பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும்
பண்பே தலை.
---- ௫௭௯
தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் செய்தாரையும் தண்டிக்காது அருள் நோக்கோடு
அக்குற்றத்தைப் பொறுத்து அவரைக் காப்பது தலைசிறந்த
பண்பாகும்.
”
கண்ணின் உவந்து நெஞ்சு அவிழ்பு அறியா
நண்ணார்
தேஎத்தும் பொய்ப்பு அறியலனே
கனவினும்…….”
பதிற்றுப்பத்து.
கண்ணால் மகிழ்ந்து பார்த்து, உள்ளத்திலே வஞ்சக உணர்வுகொண்ட பகைவரிடத்தும்
கனவினும் பொய் கூறுதலை அறியாதவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.