வெள்ளி, 4 அக்டோபர், 2019

தொல்தமிழர் அறிவியல் –103 : 34. அசுணம்

தொல்தமிழர் அறிவியல் –103 : 34. அசுணம்

 -அசுணமா பிற்காலத்தில்

இன்னளிக் குரற்கேட்ட அசுணமா
அன்னளாய் மகிழ்வெய்து – சீவக.1402 .
            
                 இனிமை பொருந்திய யாழின் இசைகேட்டு மகிழ்கின்ற அசுணமாபோலத் திலோத்தமை மகிழ்ச்சி அடைந்தாள்.
பறைபட வாழா அசுணமா ..
விளம்பிநாகனார், நான்மணி. 4:1
                           கேகயப் பறவைகள், பறையின் ஓசை தம் செவியில்பட்டால் உயிர் வாழ மாட்டா.

acuṇam-அசுணம்

               A creature believed to be so susceptible to harmony that when it is fascinated by notes of music, a sudden loud beat of the drum causes its instantaneous death;
                          அசுணம் பறவையா விலங்கா என்பதில்  குழப்பம் நிலவினும்மலைமுழையிலிருக்கும் அசுணமாகிய விலங்கு’ என நற். 244ஆம் பாடல் வழியும் ’மலையின் பிளப்பாய குகையிலுள்ள அசுணங்கள்’ என அகநா. 88 ஆம் பாடல் வழியும் இன்ன பிற சான்றுகளாலும் அசுணம் விலங்கினமே என்பதில் ஐயமில்லை. ஆயினும் இவ்விலங்கு பற்றிய செய்திகள் அரிதாகவே கிடைக்கின்றன. இவ்விலங்கு அழிந்துபோன விலங்கினங்களுள் ஒன்றாக  இருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

Asunam, an extinct bird
                      
                       “ In numerable references to Asunam are found in Sangam literature. May be this was a fabulous bird or real. But seems to have been highly sensitive. The bird is so inspired and sensitively  fascinated by the music of Yazh that it will die, if the tone of the music becomes harsh and loud.
                     
                     The canon of Sangam literature  abounds in references to Asunam as bird. But Natrinai(304) speaks of an animal susceptible to harmony and music. Not known whether there was an animal also infatuated   to music in ancient days.
                  
                 But examples from Kalitogai, Akananooru, Paripadal and Ceevaka chinthamani refer Asunam as a bird only. Soft, mellowing and sweet music Asunam will enjoy. But it can not withstand even  for a minute, the harsh rough and coarse sound of a drum or a drum- like object.” ---Editor. ---------தொடரும்…..

1 கருத்து: