வெள்ளி, 11 அக்டோபர், 2019

தொல்தமிழர் அறிவியல் –110 : 38. மழை- அறிவியல்

தொல்தமிழர் அறிவியல் –110 :  38. மழை- அறிவியல்

38. மழை  - அறிவியல்

               “ மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில்இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின்வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களைஅடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகிவிடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும்ஆவியாகிவிடுவது உண்டு. ஒரு இடத்தில் மழை அதிகமாகப் பெய்யும் காலம், அவ்விடத்திற்குரிய மழைக்காலம் என அழைக்கப்படுகின்றது.”   ---விக்கிபீடியா.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியல் அறிவு

என்றூழ் உறவரும் இருசுடர் நேமி
ஒன்றியன்சுடர் நிலை உள்படுவோரும்
                               --- நப்பண்ணனார், பரி.19: 46, 47
என்றூழ்ஞாயிறு, நாண்மீனும் பிற மீனுமாகிய இருவகை மீன்களும். ஞாயிறு முதன்மையாகப் பொருந்த இயங்கும். இவ்வடிகளானே பண்டைக் காலத்துத் தமிழ்ச் சான்றோர் வானின்கண் உள்ள நாள், கோள் முதலியவற்றை ஆராய்ந்து அவற்றைப் பொதுவிடங்களிலே ஓவியமாகவும் வரைந்து மாந்தர்க்கு அறிவுறுத்தி வந்தமை உணரப்படும். நாள் மீன்களையும் விண்மீன்களையும் உடைய சுடர்ச் சக்கரத்தைப் பொருந்தி ஞாயிறு முதலாக வரும் கோள்களினது நிலைமையை விளக்கி ஆண்டுத் தீட்டப்பட்ட ஓவியங்களைக் காண்பர்.
மழைக் கோள்

அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடா(து)
மழைவேண்டு புலத்து மாரி நிற்ப
நோயொடு பசி இகந்து ஒரீஇப்
பூத்தன்று பெரும நீ காத்த நாடே.
            -- குமட்டூர் கண்ணனார், பதிற்றுப். 13 : 25-28
              செவ்வாய்க் கோள் சென்றவழியில் சுக்கிரன் கோள் செல்லாமல், மழை தேவையான இடங்களிலெல்லாம் நின் நாட்டில் மழை பெய்கிறது, நோயும் பசியும் நின் குடிகளுக்கு இல்லாமல் நீ காத்துவரும் நாடுகள் பொலிவு பெற்று விளங்கிகின்றன.

வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர
வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி
பயம் கெழு பொழுதொடு ஆநியம் நிற்ப
--- பாலைக் கெளதமனார். 24 : 23 –  25

                 விளங்குகின்ற  கதிர்கள் வானத்திலெங்கும் பரந்து ஒளி வீசவடக்கே சிறிது சாய்ந்துள்ள சிறப்பமைந்த வெள்ளி என்னும் கோளானது பயன் பொருந்திய பிற கோள்களோடு தனக்குரிய நல்ல நாளிலே மழை பொழிவதற்கு நிற்க…..
                   ( மழைக் கோளாகிய வெள்ளி- மழை பெய்வதற்கு ஏதுவாகச் சிறிது வடக்கே சாய்ந்து நிற்குமாறு தோன்றவறிது வடக்கிறைஞ்சிய வெள்ளிஎன்றார். வெள்ளி தெற்கே நின்றால் மழை இல்லை. வெள்ளிசுக்கிரன். மேலும் காண்க :
 ”வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கேகினும் …… புயன் மாறி வான் பொய்ப்பினும் “ -- .பாலை. 1-2. )

இருங்கண் ஞாலத்து அருந் தொழில் உதவிப்
பெரும் பெயல் பொழிந்த …………….
--இளவேட்டனார். நற். 157 : 1 – 2----தொடரும்....

1 கருத்து: