சனி, 5 அக்டோபர், 2019

தொல்தமிழர் அறிவியல் –104 : 35. மாசுணம்

தொல்தமிழர் அறிவியல் –104 : 35. மாசுணம்

35. மாசுணம்

 “மைந்துமலி சினத்த களிறு மதனழிக்கும்
துஞ்சுமரங் கடுக்கும் மாசுணம் விலங்கி
 இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு. 260.- 261
                      வலிமிகும் சினம்கொண்ட யானையின் வலிமையைக் கெடுத்து, அதனை விழுங்கும் ஆற்றலுடைய, அகன்ற படத்தினையும் அழகிய கண்ணினையும் விழுந்து கிடக்கும் பெருமரங்களைப் போன்ற தோற்றத்தையும் கொண்ட பெரும் பாம்பு கிடக்கும் வழியை விலக்கிச் செல்க.
வெண்கோட்டு யானை விளிபடத் துழவும்
அகல்வாய்ப் பாந்தள் படாஅர்ப்
பகலும் அஞ்சும் பனிக்கடுஞ் சுரனே
                                                ---ஊட்டியார், அகநா. 68: 19 – 21
                   அகன்ற வாயினையுடைய பாம்புச் செடியினையுடையதும் ஆகிய,  பகற்பொழுதினும் மிக்க நடுக்கத்தினைச் செய்யும் சுரநெறியில்..
பாந்தள் படார் = பாம்புபோலும் இயல்பினையுடைய ஒரு செடி.
-- Arisaema Leschenaulti  பி.எல். சாமி, சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம்,1967, ப. 75. 

களிறு பாந்தள் பட்டெனத்
துஞ்சாத் துயரத் தஞ்சு பிடிப்பூசல்
                                                ---மாமூலனார், நற். 14:
களிறகப் படுத்த பெருஞ்சின மாசுணம்நற். 14

பெரிய பாந்தள் மறங்கிளர் மானயானை வயிற்றினவாக
வாய் சோர்ந்து றங்கினகம்ப.சேதுபந்தன.

பாம்பு யானையை உண்ண வல்லது என்பதை –

இடிகொள் வேழத்தை யெற்றொடும் எடுத்துடன் விழுங்கும் கடிய மாசுணம் “ கம்ப. சித்திரக் ; 35.
 மாசுணம் = பெரும்பாம்பு – (Rock Snake, Phythonidae)

                                 “ இந்துமாக் கடல் பகுதியைச் சேர்ந்த நிலப் பகுதிகளிலேதாம் பாம்புகளில் பல்வேறு வகைகளும் காணப்படுகின்றன. அவற்றுள் இந்தியாவில் மட்டும் இருநூற்று முப்பது வகைகள் உள்ளன என்று கூறுகின்றனர்.
இவற்றுள் மிகப்பெரிய இனம் தென் அமெரிக்காவிலுள்ள அனகொண்டாவும்                                                ( Anaconda) இந்தியாவிலும் மலேயாவிலும் உள்ள பாந்தளுமே (Python) இவை முப்பது அடி நீளமுள்ளவை.
                  
                                நச்சுப் பாம்புகளுள் மிகக்கொடியதும் பெரியதும் இந்தியாவிலுள்ள அரச நாகமேயாம். இது பதினெட்டு அடி நீளமுள்ளது. இது பர்மா தென்சீனம் மலேயா பிலிப்பைன் தீவுகள் என்பவற்றிலும் காணப்படும் . இதற்கு அடுத்தபடியாகப் பெரிய நச்சுப் பாம்பு தென்கண்டத்திலுள்ள பறவை நாகம்  (Dragon Snake) ஆகும். இது பன்னிரண்டு அடி நீளமுள்ளது. ----கா. அப்பாதுரை. குமரிக்கண்டம்.------தொடரும்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக