செவ்வாய், 1 அக்டோபர், 2019

தொல்தமிழர் அறிவியல் –100 : 33. பாம்பு – செவித் திறன்

தொல்தமிழர் அறிவியல் –100 :  

33. பாம்பு – செவித் திறன்

            

33. பாம்புசெவித் திறன்

யானும் ஏழ்மணி அம்கேழ் அணிஉத்திக்
கண்கேள்விக் கவை நாவின்
நிறன் உற்ற அராஅப் போலும்
                           கோவூர்கிழார் , புறநா. : 382 : 13-15
                        எழுச்சியையுடைய மணிநிறம் பொருந்திய, அழகிய படப் பொறி கொண்ட, கண்ணாற் கேட்கும் திறன் பெற்ற, பிளவுபட்ட நாக்கினை உடைய,  நிறம் பொருந்திய பாம்பு தன் தோலை உரித்து நீக்கினாற்போல.  மேலும் கூரிய செவிப்புலன் உடையோரைப் பாம்புக்காது உடையோன் எனக் கூறும் வழக்கினையும் காண்க. மேலும் காண்க:126.

நெடுவரை மருங்கின் பாம்புபட இடிக்கும்
கடுவிசை உருமின் கழறுகுரல் அளைஇக்
காலொடு வந்த கமஞ்சூல் மாமழை
                                          ஒளவையார், குறுந். 158: 1 – 3
                    உயர்ந்த மலைப் பக்கத்தில் வாழும் பாம்புகள் இறந்துபடும்படி ஒலிக்கும் மிக்க வேகத்தையுடைய இடியேற்றினது
இடியோசை கேட்ட நாகம்போலஎன்றும் இலக்கியக் குறிப்பும் உள்ளது.
                         
                        அறிவியலாளர் ஆய்வின்வழி பாம்புகள் கண்ணால் கேட்பதில்லை என்றும் மாறாக அதன் தாடைகளில் உள்ள ஒலிஉணர் நரம்புகள் வழி மிக மெல்லிய ஓசையையும் அறியும் ஆற்றல் உடையது என்கின்றனர்
                     
                     சங்கச்சான்றோர் வெளிப்புறச் செவி இல்லை என்பதால் பாம்புகள் கண்களால் கேட்கும் திறன் படைத்தவை என்று கொண்டனர்.

Sound Moving Through the Air
How snakes see, smell and hear
                              
                              Snakes have no eyelids and cannot close their eyes. Their eyes are protected by a clear scale which is part of their skin and functions like a spectacle. Many snakes have excellent eyesight, particularly some of the daytime predators (such as whip snakes), and most have good eyesight at least over short distances.
                         However, in most snakes the sense of smell is more vital. A snake's main organ of smell is its forked tongue, which it flicks in and out of its mouth. The tongue picks up scent particles from the air and any objects it touches, and transfers them to two depressions in the roof of the mouth. These depressions are unique to reptiles and detect scents transferred to them from the tongue. A snake's nostrils are only used for breathing.
                       Snakes do not have outer ears - instead they hear with inner ears, which pick up vibrations from the ground through the head and belly scales. Some nocturnal snakes, such as pythons, also have heat sensory pits to help them locate the 'warm' birds and animals they prey on.
                  Snakes don't smell with their noses like humans. They have a forked or split tongue that they use to smell and taste chemical compositions in the air.
               Snakes don't have eyelids or ears, either, and their eyes don't move. To hear they feel vibrations through the ground.
                 Humans' skin flakes off a little at a time, but snakes shed their entire skin nearly three times a year. This is called molting. 
                                                         ----Journal of Experimental Biology 2012, p. 331.----------தொடரும்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக