ஞாயிறு, 20 அக்டோபர், 2019

தொல்தமிழர் அறிவியல் –116 : 40. வடவைத் தீ - முகாக்கினி

தொல்தமிழர் அறிவியல் –116 : 40. வடவைத் தீ  - முகாக்கினி

40. வடவைத் தீ  - முகாக்கினி

“ …………………. பசும் பிசிர் ஒள் அழல்
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு
ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடுந் திறல்
--கபிலர். பதிற். 62 : 5 - 8
                   பசிய தீப் பொறிகளை உடைய ஒளி பொருந்திய நெருப்பு ( ஊழியின் இறுதிக் காலத்தில்) சூரியன் பல உருவம் கொண்டது போன்ற மாயத்தோடு ஒளி திகழப் பெற்று உயிர்களுக்குப் பொறுத்தற்கு இயலாத மயக்கத்தைச் செய்தலோடு இலியைச் (இல்லாதது) செய்து திரிகின்ற ஊழித்தீயின் தன்மையைக் கொள்ளுதற்குக் காரணமான கடிய திறலால்……..
  மடங்கல் - வடவைத் தீ ; கடலில் ஊற்று முதலியவற்றால் மிகுகின்ற நீர் கரைகடந்து உலகை அழிக்காதபடி அதன உறிஞ்சி வற்றச் செய்வதொரு தீபெண் குதிரையின் தலை வடிவில் கடலின்கண் உள்ளதென்று கூறுவர்.  

Mid-ocean ridges such as the Mid-Atlantic Ridge are places in the Earth's system of tectonic plates where new crust forms and the plates move away from one another. Powered by magma rising and falling in the mantle, these undersea mountain ranges are formed by numerous eruptions of basalt lava along their length.
Because in almost all cases the eruptions take place deep below the ocean surface, mid-ocean ridges were only properly discovered in the 1950s. Scientists were surprised to find that hydrothermal vents along the ridges were home to life forms able to survive in complete darkness.
-------தொடரும்.....

1 கருத்து: