என் பழைய குறிப்பேடு-
பக்கம்: 19.
ஒலி அளவு – மாத்திரை
மாத்திரை என்பது குறியீடு, இது ஒலியளவுக்கு வரும்.
“கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே.”-7.
இயல்பாகக் கண் இமைத்தலும் விரல் நொடித்தலுமே ஒரு
மாத்திரை என்னும் ஒலி அளவு. இது தெலிவாக அறிந்தோர் கண்ட வழி.
”கண்ணிமை இயற்கை தொழிற்காலம்; நொடி செயற்கை ஓசைக்காலம்
இரண்டுமே கால அளவைக்குறிக்கும். இமைப் பொழுது,
நொடிப்பொழுது என்பது வழக்கு. ஈண்டுக் கூறும் ஒரு மாத்திரைக்குரியது.” அறிஞர் வ.சுப.
மாணிக்கம்.
“மெய்யின் அளபே அரை என மொழிப.” -11.
இது மெய்க்கு மாத்திரை அரை என மொழியும்.
”அவ் இயல் நிலையும் ஏனை மூன்றே.”-12.
குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் மூன்றும் மெய்
எழுத்துப் போல அரை மாத்திரை பெற்று நிற்கும்.
“ அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே
இசை இடன் அருகும் தெரியும் காலை” -13.
மகரம்:
அரை மாத்திரையாக இருக்கும் மகர மெய்க்கும் கால்
மாத்திரையாக ஒலிக்கும் மகரக்குறுக்கத்திற்கும் வரி வடிவில் ஒரே ஒரு வேறுபாடு உண்டு;
இயல்பான மகரமெய்க்கு உரிய வடிவின் மேல் ஒரு புள்ளி இருக்கும் (ம்). குறுகிய மகர மெய்க்கோ
உரிய வடிவின் உள்ளே அப்புள்ளி இருக்கவேண்டும்.
தொல்காப்பியர் எழுத்துக்களின் வரி வடிவகள் குறித்துப்
பின்வருமாறு கூறுவார்.
“ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன”
” மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்.”-15
“ எகர ஒகரத்து இயற்கையும் அற்றே.”-16.
புள்ளி இல்லா எல்லா மெய்யும்
வேற்றுமை வழியே மெய் புணர் நிலையே”.
என்பார்.
மூவளபு இசைத்தல் ஓர் எழுத்தின்றே”-5
ஓரெழுத்தே நின்று மூன்று மாத்திரையாக இசைத்தல் இல்லை.
எனவே பல எழுத்துக் கூடிய இடத்து மூன்று மாத்திரையும் நான்கு மாத்திரையும் இசைக்கும்
என்றவாறு.
“நீட்டம் வேண்டின் அவ்வளபு உடைய
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்.”.-6.
தாம் கருதிய மாத்திரையைத் தருதற்குரிய எழுத்துக்களைக்கூட்டி
மாத்திரைகளை எழுப்புக என்று கூறுவர்.