தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -72.
முனைவர் இரெ. குமரன்: 6. கலித்தொகை:
தொல்தமிழர் - வழிபாடு : காமவேளுக்குச் செய்யும் விழா:
”நோய்மலி நெஞ்சமொடு இனையல் தோழி
நாம் இல்லாப் புலம்பாயின் நடுக்கம் செய்பொழுதாயின் காமவேள்
விழாவாயின் கலங்குவள் பெரிது என
ஏமுறு கடுந்திண் தேர் கடவி
நாம் அமர் காதலர் துணை தந்தார் விரைந்தே,”
- பாலைபாடிய பெருங்கடுங்கோ - 27, 22 – 26.
நோய் மிகுந்த நெஞ்சோடு இவ்வாறு கூறி வருந்தாதே தோழி, நாம் விரும்பிய காதலர் தனிமையும் நாம் இல்லாத தனிமையாய் இருந்தது ; காலமும் பிரிந்தார்க்கு நடுக்கம் செய்யும் காலமாய் இருந்தது ; விழாவும் காமவேளுக்குச் செய்யும் இருந்தது ; ஆதலின் மிகவும் கலங்குவாள் என்று கருதி, பகைவர் மயக்கம் உறுதலுக்குக் காரணமான வலிய திண்ணிய தேரை விரைந்து செலுத்தி, தாம் துணையாம் தன்மையைத் தந்து வந்தார் காண் ; பாராய்.
( தலைவன் குறித்துப் பிரிந்த இளவேனில் வரவின் கன்.’எம்மையோ மறக்க ; இக்காலத்து இவ்வூரின் கண் தாம் விளையாடும் விளையாட்டும் மறந்தாரோ..? எனச் சொல்லி ஆற்றாளாய தலைவிக்கு, தோழி தலைவன் வரவு உணர்ந்து, மிகுந்த மகிழ்ச்சியால் கூறியது.) ...............................தொடரும்......................................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக