வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

நற்றிணை – அரிய செய்தி - 10 - 12

நற்றிணை – அரிய செய்தி - 10
புலியின் இரை
ஈன்றுகான் மடிந்த பிணவுப்பசி கூர்ந்தென்
மான்ற மாலை வழங்குநர்ச் செகீஇய
புலிபார்த் துறையும் புல்லதர்ச் சிறுநெறி
பூதனார், நற்.29: 3-5
 குட்டி ஈன்ற பெண் புலிகாட்டில் காவல் செய்யஆண்புலி மாலை நேரத்தில் வழிச் செல்வாரைக் கொல்ல நோக்கியிருக்கும். அதன் வழியில் குறுக்கிடுவாரை வேட்டையாடும். புலி – மனிதரை உண்ணுமா ? ஆய்க.
நற்றிணை – அரிய செய்தி - 11
கண்ணீர்-வெம்மை
மார்புதலைக் கொண்ட மாணிழை மகளிர்
கவலே முற்ற வெய்துவீ ழரிப்பனி
கொற்றனார், நற். 30 ;5,6
பரத்தையர் பலரும் நீ பிரிந்ததால் கவலையுற்று கண்களினின்று வெப்பமாய் வடிகின்ற கண்ணீருடனே. ஒப்பிடு- இமை தீய்ப்பன்ன… (குறுந்) துன்பத்திலும் /  இன்பத்திலும் வெளிவரும் கண்ணீரின் தன்மை – ஆய்க.
நற்றிணை – அரிய செய்தி - 12

கப்பல்-பன்னாடு
வேறு பன்னாட்டிற் கால் தர வந்த
பலவுறு பண்ணியம் இழிதரு நிலவு மணல்
நக்கீரனார், நற். 31: 8,9
வேறாகிய பல நாட்டினின்றும் கலங்களைக் காற்றுச் செலுத்துதலாலே வந்திறுத்த பலவகைப் பண்டங்கள் இறக்கியிட்ட நிலவை ஒத்த மணற்பரப்பில்...

கண்ணன் அவதாரம்,நற்.32

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக