நற்றிணை – அரிய செய்தி – 3 - 5
தாவரவியல்
தத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி
எறிமட மாற்கு வல்சி யாகும்
பரணர், நற்.
6 : 7, 8
சுரத்தில் உள்ள குமிழ மரத்தின் வளைந்த மூக்கினை உடைய முற்றிய
கனிகள் கீழே உதிர்ந்து அங்கே குதித்து விளையாடும் இளமானுக்கும் வெறுப்பில்லா உணவாகும்.( குமிழம் பழம்)
மதன் – அழகு ; வல்சி - உணவு
நற்றிணை – அரிய செய்தி - 4
தழை ஆடை
பல்பூம் பகைத்தழை நுடங்கும் அல்குல்
........................., நற்.8:2
பல பூக்களால் மாறுபடத் தொகுக்கப்பட்ட தழையாடை அசைய உருத்த
அல்குல் அழகிய நீலமணி போன்றமேனி.... யாருடைய மகள் இவள்...... அழகிய இவளைப் பெற்ற
தந்தையும் தாயும்........
யார் மகள் கொல் இவள் தந்தை வாழியர்
...............................................
திண்டேர்ப் பொறையன் தொண்டி
தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே
தந்தை வாழ்க, திண்ணிய தேரையுடைய பொறையனது தொண்டி நகர் போன்ற
சிறப்பினைப் பெறுவாளாக.
நற்றிணை – அரிய செய்தி – 5
என்றும் காதலர்
பிரியாமல் …..
அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும்
பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்த
நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி பூக்கேழ் ஊர
...................................., நற்.10 : 1-4
அழகிய கொங்கைகள் தளரினும் பொன் போன்ற மேனி கருமணி போலத்
தாழினும் நல்ல நெடுங்கூந்தல் நரைபடத் தோன்றினும் – இவள் முதிர்ந்தாள் என்று கருதி
கைவிடாது பாதுகாப்பாயாக.என்றாள் தோழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக