நற்றிணை – அரிய செய்தி - 7
யானையை
வீழ்த்திய பாம்பு
ஞால்வாய்க் களிறு பாந்தள் பட்டெனத்
துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப்பூசல்
மாமூலனார்,
நற்.14: 8,9
தொங்குகின்ற
வாயையுடைய களிற்றுயானை பெரும்பாம்பின் வாய்ப்பட்டதாக, சோராத துயரோடு அஞ்சுகின்ற
பிடியானை பிளிரும் பேரொலியானது... யனையைத் தாக்குமா பாம்பு –ஆய்க. பாந்தள் –
பாம்பு.
நற்றிணை – அரிய செய்தி - 8
பல் பதித்த கதவு
………………………… மூவன்
முழுவலி முள்ளெயி றழுத்திய கதவிற்
பொய்கையார், நற்.18 : 3,4
தொண்டித்
திருநகர் – சேரன் – பகைவன் மூவன் -போரில் வென்று – பற்களைப் பிடுங்கி – வைத்து இழைத்த – வாயிற்கதவு.( பகைவரை அட்டு அவர் பல்லைக்கொணர்ந்து தமது
கோட்டைவாயிற் கதவில் வைத்துத் தைத்தல் பண்டை வழக்கு இதனை, கல்லா எழினி
பல்லெறிந் தழுத்திய வன்கட் கதவின் வெண்மணி வாயில், மத்தி அகம்.210 )
காட்டுக்கோழி- நாங்கூழ் – இரை
– கொள்ளுதல், நற்.21 ( உதுக்காண்-
உங்கே பாராய்)
நற்றிணை – அரிய செய்தி - 9
தைந்நீராடல்
………………….நோன்பியர்
கையூ ணிருக்கையின் தோன்றும் நாடன்
……………………….. நற். 22: 6,7
நோன்புடையார் தைத் திங்கள் பிறப்பில் நீராடி நோன்பு முற்றியிருந்து
உண்ணுதல் போல….
புள்ளி- குதிரின் உறைக்கிடப்பட்ட எண்ணுதலமைந்த குறியீடு.- செவ்வி சேர்ந்த புள்ளி வெள்ளரை- நற்.26
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக