திங்கள், 9 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 19 - 20

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 19 - 20
கடற் கொள்ளையர்
மிளகு எறி உகக்கையின் இருத்தலை இடித்து
வைகு ஆர்பு எழுந்த மை படு பரப்பின்
………………………………………
கடும் பரிப் புரவி ஊர்ந்த நின்
படும் திரைப் பனிக்கடல் உழந்த தாளே
பரணர். பதிற். 41 : 21 - 27
 பெரிய போரின்கண் அரசர்கள் இறக்கும்படி வெல்ல வேண்டியும் வெம்மையின் மிகுதி பெருகவும் பகைவரது கரிய தலைய உலக்கையால் இடித்த மிளகைப் போல இடித்து இடையறாமல் எழுந்த ஆரவாரம் பெருக -  வெள்ளிய தலை ஆட்டத்துடன் விரைந்து செல்லும் குதிரையை ஊர்ந்து..
ஒலிக்கின்ற அலைகளை உடைய கடலிலே வருந்திய கால்கள் – (செங்குட்டுவன் கடல் நடுவே உள்ள தீவு ஒன்றில் வாழ்ந்த கொள்ளைக் கூட்டத்தினரை ஆங்குச் சென்று அழித்தான் என்பது வரலாறு.)
பதிற்றுப்பத்து – அரிய செய்தி - 20
அறுவை மருத்துவம்
மீன் தேர் கொட்பின் பனிக் கயம் மூழ்கிச்
சிரல் பெயர்ந்தன்ன நெடு வெள் ஊசி
நெடுவசி பரந்த வடு வாழ் மார்பின்
அம்பு சேர் உடம்பினர்ச் சேர்ந்தோர்
பரணர். பதிற். 42 : 2 - 5


மீனை ஆராயும் சுழற்சியால் குளிர்ந்த குளத்தில் மூழ்கி  - மீன் கொத்திப் பறவை மேலே எழுந்தாற் போல – அம்பு தைத்த உடம்பினை உடையோர்…நெடிய வெள்ளிய ஊசியின் நீண்ட கூர்மை தைத்ததனால் பரவிய தழும்பு ஆழ்ந்த மார்பினையும் ( நெடுவசி – ஊசித் தழும்பு )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக