திங்கள், 31 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 372

திருக்குறள் – சிறப்புரை : 372
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை. – 372
தீவினையால் பொருள் இழக்கும் காலத்து  அறிவு கெடும் ; நல்வினையால் பொருள் சேரும் காலத்து அறிவு விரிவாகும்.
வளம்பட வேண்டாதார் யார் யாரும் இல்லை
அளந்தன போகம் அவர் அவர் ஆற்றான்
-      நாலடியார், 11 : 3: 1,2
செல்வ வளத்தோடு இன்பமாக வாழ வேண்டும் என்று விரும்பாதார் யார் ? ஒருவரும் இல்லை ; ஆனால் அவரவர் பழவினையால் அவரவர்க்குரிய செல்வமும் இன்பமும் அளந்து வைக்கப்பட்டிருக்கின்றன, 

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 371


திருக்குறள் – சிறப்புரை : 371
ஊழ்
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி. – 371
பொருள் ஆகும் காலத்துத் தோன்றும்  சோர்வின்மை ; கைப்பொருள் அழியும் காலத்துத் தோன்றும் சோம்பல்.
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வமன்று தம் செய்வினைப் பயனே
                 மிளைகிழான் நல்வேட்டனார், நற். 210 : 5, 6

பலரால் பாராட்டப்படுதலும் விரைந்து செல்லும் குதிரை, தேர் முதலியவற்றை ஏறிச் செலுத்துதலும் செல்வம் அன்று முன் செய்த நல்வினைப் பயனே.

சனி, 29 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 370

திருக்குறள் – சிறப்புரை : 370
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். – 370
எந்நிலையிலும் எக்காலத்தும் ஆசை தீர்ந்து போயிற்று என்ற நிலை எய்துதல் அரிது ; ஆசையை விட்டொழித்தால் அந்நிலையில் பிறவாமையாகிய பேரின்பம் கிட்டும்.

“ ஐம்புலன்களும் மட்டுப்படாமல் பொருள்கள்மேல் பொருந்தித் துய்க்க மேலும் மேலும் ஆர்த்தார்த்து எழும்பும் ஆசைகளை வேரோடு களைதல்தான் புலனடக்கத்தினால் ஒருவன் பெறும் பயனாகும். ஆசைதான் பிறவிக்கு வித்து என்றும், துன்பம் ஆகிய நெருப்பு எரிதற்கு ஆசையாகிய விறகுதான் ஏது என்றும், ஆசை தீர்ந்தால் துயரமும் தீர்ந்து போகுமென்றும் பெளத்த நூல்கள் பகர்கின்றன.” – பேரா. சோ.ந. கந்தசாமி.

வெள்ளி, 28 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 369

திருக்குறள் – சிறப்புரை : 369
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின். – 369
ஆசை என்னும் துன்பத்துள் ஆழ்ந்து,  துன்பம்            கெட்ட ழியுமாறு ஒழுகக் கற்றுக்கொண்டால், இன்பம் இடையறாது வந்துசேரும்.
“வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே; 
சித்து கற்கும் ஆசை சிதையேனே என்குதே” – பட்டினத்தார். 

வியாழன், 27 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 368

திருக்குறள் – சிறப்புரை : 368
அவா இல்லார்க் கில்லாகுந் துன்பமன்அஃ துண்டேல்
தவாஅது மேன்மேல் வரும். – 368
ஆசை இல்லாதவருக்குத் துன்பம் இல்லை ; ஆசை   இருக்குமேயானால்  துன்பமும் தொடர்ந்துவரும்.
” வழக்கத் தலங்களிலும் மண்பெண்பொன் ஆசையினும்

  பழக்கம் தவிராமல் பதி இழந்து கெட்டேனே” – பட்டினத்தார்.

புதன், 26 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 367

திருக்குறள் – சிறப்புரை : 367
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.- 367
ஆசையை முற்றாக அறுத்தொழித்தால் மீண்டும் பிறத்தலாகிய தீவினை அகன்று, பிறவாமையாகிய நல்வினை,  வேண்டியவாறு தானே வந்துசேரும்.
” ஓசை பரிசம் உருவம் சுவை நாற்றம்

ஆசை படுத்தும் அன்று.” – ஒளவை குறள்.

செவ்வாய், 25 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 366

திருக்குறள் – சிறப்புரை : 366
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா. – 366
ஒருவனை வஞ்சித்துத் துன்பத்தில் உழலத் தூண்டுவது ஆசையே ;  ஆசைக்கு இணங்காது அஞ்சி வாழ்வதே அறம் ஆம்.
”தோன்றாசை மூன்றும் பிரித்தறிவது எக்காலம்
ஊன்றாசை வேரைஅடி ஊடறுப்பது எக்காலம்.?” – பத்திரகிரியார் 

திங்கள், 24 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 365

திருக்குறள் – சிறப்புரை : 365
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர். – 365
ஆசை அற்றவர்களே முற்றும் பற்றற்றவர்கள் ஆவர் ; ஆசையை ஒழிக்க முடியாதவர்கள் பிறவித் துன்பத்தில் உழன்று துன்புறுவர்.
“ நீர்க்குமிழி ஆம் உடலை நித்தியமாய் எண்ணுதே
 ஆர்க்கும் உயராசை அழியேனே என்குதே” – பட்டினத்தார் 

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 364

திருக்குறள் – சிறப்புரை : 364
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஉய்மை வேண்ட வரும். – 364
எந்த ஒன்றிலும் ஆசையற்ற மனநிலையே தூய்மை ;  தூய்மை உண்மையானல்  விரும்பிய மற்றவையெல்லாம் கைவரப் பெறலாம்.
“மக்கள் சுற்றத் தாசை மறக்கேனே என்குதே “ 

சனி, 22 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 363

திருக்குறள் – சிறப்புரை : 363
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்பது இல். – 363
சிறந்த செல்வம் என்பது ஆசையற்ற மனமே ;  இதைவிடச் சிறந்த செல்வம் வேறெதுவும் இல்லை . உயிரில் வித்தாக விழுந்த ஆசை அற்றுப்போமோ..?

 “ பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே ”

வெள்ளி, 21 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 362

திருக்குறள் – சிறப்புரை : 362
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். – 362
துறந்தான் ஒருவன்  மீண்டும் பிறவாமை வேண்டும் என்று வேண்டுதல் வேண்டும் ;அப் பிறவாமையும் கூடப் பிறவாமை உள்ளிட்ட எந்த ஒன்றின் மீதும் ஆசையற்ற நிலையில் தானே வந்துசேரும்.
பார்த்தவிட மெல்லாம் பரமென் றிருமனமே
காற்றனல்மண் நீர்வெளியாம் சுண்டவெல்லாம் மாத்திரண்ட
ஐம்புலனு நில்லா ஆசைகளும் நில்லாவே

என்புடலும் நில்லா தினி.” --- பட்டினச் சித்தர்.

வியாழன், 20 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 361

திருக்குறள் – சிறப்புரை : 361
அவா அறுத்தல்
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. – 361
ஆசை, எல்லா உயிர்களுக்கும் எக்காலத்தும்  உயிரில் உறைந்து நின்று பிறவித் துன்பங்களையும்  தருகின்ற வித்து.
“ தம்மபதம், ‘ வனத்தில் பழங்களைத் தேடித் திரியும் குரங்கினைப்போல் ஆசைபிடித்தவன் பல பிறவிகளில் சுழல்கிறான்.” (334) என்று இயம்புகிறது.” – பேரா.சோ.ந. கந்தசாமி. 

புதன், 19 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை :360 - துறவைத் துற..

திருக்குறள் – சிறப்புரை :360
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய். – 360
காமம், வெகுளி, மயக்கம் (அறியாமை) எனும் மூன்று குற்றங்களும் முற்றாக ஒழித்த நிலையில் பிறவித் துன்பமும் இல்லாமல் போகும்.
“ மண்ணின் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
  எண்ணின் நல்ல கதிக்கு யாதுமோர் குறையிலை” – திருஞான சம்பந்தர்.
 “ மனைவி, மக்கள், சுற்றம் எல்லாம் பற்று வைக்கத்தான்” – இல்லறம், துறவறம் என்னும் இரண்டனுள் திருவள்ளுவர் போற்றி உரைப்பது இல்லறத்தையே. துறவறம் தமிழர் ஒழுக்கம் இல்லை என்றாலும் மக்களுள் ஒரு சாரார் துறவை விரும்புவாரும் உளராதலால் அவர்களும் ஒழுக்கநெறி வழுவாது  நிற்க வேண்டியே துறவு, மெய்யுணர்வு அதிகாரங்களை அமைத்துள்ளாரெனவும் கொள்ளலாம்.
“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது –” என்று மானிடப் பிறப்பின் பெருமை பேசும் தமிழ். எடுத்த பிறவியை இனிதே போற்றி, இயற்கையோடு இயைந்து நடத்தி இன்புற்று வாழ்ந்து, இறந்தபின்னும் வாழ்தல் வேண்டும் என்பர் சான்றோர்…
“ மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
  தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே” -    (புறநா. 165)
நிலையில்லாத இவ்வுலகத்தில் நிலைபெற விரும்பியோர், தம் புகழை நிலை நிறுத்தித் தாம் இறந்தனரே. 

செவ்வாய், 18 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை :359

திருக்குறள் – சிறப்புரை :359
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய். – 359
சார்ந்துவாழ்தலின் இயல்பை உணர்ந்து, அக, புறப் பற்றுகளை ஒழித்து ஒழுக்க நெறி நின்று வாழ்வாராயின் அவரைத் துன்பம் தரவல்ல
பிறப்புக்குரிய நோய்கள் (வினைகள்  ) பற்றிக் கொள்ளா.
“ எனைப் பிறப்பறுத்து என்வினை கட்டறுத்து ஏழ்நரகத்து

  என்னைக் கிடக்கல் ஒட்டான் சிவலோகத்து இருத்திடுமே.” – திருநாவுக்கரசர்.

திங்கள், 17 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை :358

திருக்குறள் – சிறப்புரை :358
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
 செம்பொருள் காண்பது அறிவு. – 358
பிறப்பு என்று சொல்லப்படுகின்ற அறியாமை நீங்க,  சிறப்பு என்று சொல்லபடுகின்ற மெய்ப்பொருளைக் கண்டு தெளிவதே  அறிவாம்.
“ அறிவு அறியாமை கடந்து அறிவானால்

அறிவு அறியாமை அழகிய வாறே.” – திருமூலர்.

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 357

திருக்குறள் – சிறப்புரை : 357
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. – 357
நன்றாக ஆராய்ந்து, தெளிந்து  தன் உள்ளத்தின் உண்மைத்தன்மையை உணர்ந்து கொண்டாராயின் மீண்டும் பிறத்தல்  பற்றிய எண்ணங் கொள்ளார்.
“ பிறவியிலிருந்து விடுபட, தன் உண்மை நிலையை உணர்வதைத் தவிர வேறு வழியில்லை.” -  விவேக சூடாமணி. 

சனி, 15 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 356

திருக்குறள் – சிறப்புரை : 356
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
 மற்றீண்டு வாரா நெறி. – 356

இவ்வுலகில் கற்க வேண்டியவற்றைக் கற்று, உண்மைப் பொருளை உணர்ந்துகொண்டால் மீண்டும் பிறப்பு உள்ளதாக  எண்ண வேண்டியதில்லை . துறவோர் மெய்ப்பொருள் அறியும் வழி நுதலிற்று .

வெள்ளி, 14 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 355

திருக்குறள் – சிறப்புரை : 355
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
 மெய்ப்பொருள் காண்பது அறிவு. – 355
எப்பொருளாயினும் அகத்தானும் புறத்தானும் அஃது எத்தன்மை உடையதாயிருந்தாலும் அப்பொருளின் உண்மைத்தன்மையைஆராய்ந்து அறிவதே  அறிவாம்.
அறிவியலின் அடிப்படை விதி இஃது எனக் கொள்க. 

வியாழன், 13 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை :354

திருக்குறள் – சிறப்புரை :354
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. – 354
ஐய உணர்வில் மயங்கிக் கிடப்பினும்- முயன்று  மெய்யுணர்வினைப் பெற்றுத் தெளியாதவருக்கு இப்பிறப்பினால் ஒரு பயனும் இல்லையாம். பிறப்பறுத்தலாகிய பயன் இல்லை என்பதாம்.
“ துன்பமே மீதூரக் கண்டும் துறவு உள்ளார்
  இன்பமே காமுறுவர் ஏழையர் …..” நாலடியார். 

புதன், 12 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 353

திருக்குறள் – சிறப்புரை : 353
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து. – 353
ஐயுற்று மயங்கி நின்று பின்னர் மெய்ப்பொருளைக் கண்டு தெளிந்தார்க்கு வாழும் வையகத்தைவிட வானுலகம் அண்மையில் உள்ளதாம். மெய்ப்பொருள் கண்டார்க்கு வானுலகம் எளிதே கிட்டும்.
“ துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது” ~ முதுமொழிக் காஞ்சி. 

செவ்வாய், 11 அக்டோபர், 2016

Raise taxes on sugary drinks ......

Raise taxes on sugary drinks to fight obesity. Diabetes : WHO
                Geneva : The World Health Organisation  said on Tuesday Governments should raise taxes on sugary drinks to fight what it says are global obesity and diabetes epidemics.
If retail prices of sugar sweetened drinks are increased by 20% through taxation. There is a proportional  drop in consumption . it said in a report titled ‘Fiscal Policies for Diet and Prevention of non communicable Diseases’ . Obesity more than doubled worldwide between 1960 and 2014 . with 11% of men and 15% of women classified obese …. More than 500 million people. The WHO said……………….

For more …Pl. Read TOI 12/10/16.  
திருக்குறள் – சிறப்புரை : 352
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
 மாசறு காட்சி யவர்க்கு. – 352
மெய்ப்பொருள் இதுவென உணர்ந்த குற்றமற்றதெளிந்த அறிவுடையவர் அறியாமையாகிய இருள் நீங்கப் பெற்றுப் பேரின்ப நிலை எய்துவர்.
அறியாமையாகிய அகத்து இருள் நீங்கின் மெய்யறிவால் இன்பம் பிறக்கும்.
“ அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்
   பிறிதினால் மாண்டது எவனாம் “ ~ பழமொழி.

முந்நீர்

முந்நீர்
நுங்கு நீர் … கரும்புச்சாறு …. இளநீர்
இரும் பனையின் குரும்பை நீரும்
பூங் கரும்பின் தீஞ் சாறும்
ஓங்கு மணற் குவவுத் தாழைத்
தீம் நீரோடுடன் விராஅய்
முந்நீருண்டு ……………………..
       மாங்குடி கிழார். புறநா. 24 : 12 ~ 16

வளையலணிந்த மகளிர் பெரிய பனையினது நுங்கின் நீரும் பொலிவினையுடைய கரும்பினது இனிய சாறும் உயர்ந்த மணலிடத்துத் திரண்ட தெங்கினது இனிய இளநீருடனே கூடக் கலந்து இம்மூன்று நீரையும் உண்டு மகிழ்ந்தனர்…..

திங்கள், 10 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 351

திருக்குறள் – சிறப்புரை : 351
36. மெய்யுணர்வு
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. – 351
நிலையில்லாதனவற்றை நிலையின என்று பிறழ்ந்துணரும் மயக்க உணர்வினால் சிறப்பு இல்லாத பிறப்பு நிகழ்கிறது.
மீண்டும் பிறவாமையாகிய மெய்ப்பொருளை உணர்தல் வேண்டும்.
” நின்றன நின்றன நில்லா என உணர்ந்து

ஒன்றின ஒன்றின வல்லே செய்க “ ~ நாலடியார்.

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

Drinking too much Water can kill you
Study says “8 Glasses A Day ” Mantra A Myth. One should Drink By Thirst
                                  Melbourne : Driking too much water may cause potentially fatal water intoxication. Claims a new study which has for the first time identified the mechanism that regulates fluid intake in the human body and stops us from over drinking.
                         The study led by researchers from Monash University in Australia. Challenges the popular idea that we should drink eight glasses of water a day for good health.
                         It showed that a ‘swallowing inhibition ‘ is activated by the brain after excess liquid is consumed helping maintain tightly calibrated volumes o water in the body.
                           “ If we just do what our body demands us to we will probably get it right ~ just drink according to drinking too much water puts the body in danger of water intoxication of hyponatremia. When vital levels of sodium in the blood become abnormally low. Potentially causing symptoms ranging from lethargy and nausea to convulsions and coma thirst rather than an elaborate schedule “ said Michael Farrell. Associate professor at Monash.

                                            For more Pl. Read… Times of India ~ 10/10/16.

திருக்குறள் – சிறப்புரை : 350

திருக்குறள் – சிறப்புரை : 350
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. – 350
முற்றும் பற்றற்றநிலை எய்தியவன்தன் குறிக்கோளை இறுகப் பற்றிக்கொள்க; பற்றற்ற நிலை எய்த அதுவே சிறந்த வழியாம். பற்று விடலாவது மனம் மொழி மெய் வழி நிகழும் விருப்பினைத் துறத்தலே. 

சனி, 8 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 349

திருக்குறள் – சிறப்புரை : 349
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும். – 349
முற்றிலும் பற்றற்ற நிலையில் மீண்டும் பிறவாமை என்னும் பேறு கிட்டும் இல்லாதுபோனால் பற்று (ஆசைகள்) பற்றிவர.  பிறப்பும் இறப்புமாகிய நிலையாமை  தோற்றம்பெறும்.

பற்றற்ற நிலை / துறவு என்பதெல்லாம் இயற்கைக்குப் பொருந்தாத வாழ்க்கைமுறை ~  உயிர்கள் ஒன்றை ஒன்று சார்ந்திருத்தல் / பற்றியிருத்தல் இயற்கை விதி ; விதி வலியது.

திருக்குறள் – சிறப்புரை : 348

திருக்குறள் – சிறப்புரை : 348
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர். – 348
இவ்வுலக வாழ்க்கையைத் தன் உடலோடும் உயிரோடும் ஒட்டாது முற்றும் துறந்தவரே துறவில் சிறந்தார் ; அடி மனத்தில் ஆசையைச் சுமந்து துறவு வேடம் புனைந்தவர் மயங்கி  பிறப்பாகிய வலையில் சிக்கியவர் ஆவார்.

போலித் துறவு …. இல்லறமுமன்று துறவறமுமன்று ~ இரண்டுங்கெட்டான் இழிநிலை.

வெள்ளி, 7 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 347

திருக்குறள் – சிறப்புரை : 347
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு. – 347
பிறவித் துன்பத்தினின்றும் விடுபட நினையாது மேலும் வாழ வேண்டி ஆசைகளை விடாது பற்றிக் கொண்டவர்களைத் துன்பங்களும் விடாது பற்றிநின்று வருத்தும்.
பற்றுக்கு உறவு ; பற்று அற்றுப்போகத் துறவு. 

வியாழன், 6 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 346

திருக்குறள் – சிறப்புரை : 346
யான்எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். – 346
யான் என்னும் அகப்பற்றும் எனது என்னும் புறப்பற்றும் ஆகிய எண்ணங்களை மனத்திலிருந்து அறுத்தெறிந்தவர்கள் பிறவாமை என்னும் பேரின்பம் பெற்றவர்கள் வாழும் உயர்ந்த உலகம் சென்றடைவார்கள்.
யான் எனது : உறவும் உரிமையும் கொண்டாடும் உலக வாழ்க்கை. 

புதன், 5 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 345

திருக்குறள் – சிறப்புரை : 345
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. 345
பிறவித்துன்பம் நீங்கத்  துறவு மேற்கொண்டோர்க்கு உயிர் இயக்கும் உடலும் ஆசையின் அடையாளமே ; பூசுவதும் பூணுவதும் கொண்டு உடலைப் பேணி இவ்வுலக வாழ்க்கையோடு தொடர்பு வைத்துக்கொள்ள விழைவது எதற்கு..?

 “ உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே “