71. குறிப்பறிதல்
திருக்குறள்
– சிறப்புரை : 701
கூறாமை நோக்கிக்
குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு
அணி. – ௭0௧
ஒருவர் வாய் திறந்து எதுவும் கூறாதபோது அவர் முகம் நோக்கிக் குறிப்பால்
அவர் மனதில் உள்ளதை அறியும் ஆற்றலுடையவன் எக்காலத்தும்
வற்றாத நீரை உடைய கடல் சூழ்ந்த இவ்வுலகிற்கு அணியாவான்.
“
இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன்
நல்லது வெஃகி வினை செய்வார்.”---பரிபாடல்.
இரப்போருடைய வறுமையை அவர்தம் மெய்ப்பாட்டாலேயே உணர்ந்து அவர் வாய் திறந்து
கேட்பதற்குமுன் ஈதலைச் செய்வார் சான்றோர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக